திங்கள் - முதல் நாள்
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கவும். முதல் நாள் முழுவதும் திட உணவு எதுவும் சாப்பிட வேண்டாம். நிறைய தண்ணீர் அருந்தவும். பழச்சாறு அல்லது பழக்கூழ் போன்றவற்றை பசிக்கும்போது பருகவும். உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
செய்வாய் - பழங்கள்
இரண்டாம் நாள் முழுவதும் விருப்பப்பட்ட பழங்களை உண்ணலாம். இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, கொய்யா, பலா, தர்பூசணி, சாத்துக்குடி, போன்றவற்றை சாப்பிடலாம். வாழைப்பழத்தை தவிர்த்துவிடவும்.
புதன் - நார்ச்சத்து
காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதன்பின் நாள் முழுவதும் காய்கறிகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மிகவும் நல்லது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்கவும். உடல் சுத்தமாகும்.
வியாழன் - கால்ஷியம்
நாலாவது நாளில் உடம்புக்கு நிச்சயம் கால்ஷியம் சத்து தேவைப்படும். பால் இரண்டு தம்ளர் மற்றும் கொஞ்சம் பாலாடைக்கட்டி சாப்பிடலாம். இன்று வாழைப்பழத்தை நிச்சயம் சாப்பிடவும். இது உடல் சக்தியை அதிகரிக்க உதவும்.
வெள்ளி - மாவுச்சத்து
ஐந்தாவது நாளில் உடல் இப்போது எடையற்று இருப்பதைப் போலத் தோன்றும். மெலிவதற்கான அறிகுறிகள் தென்படும். இப்போது சிவப்பு அரிசி சாதம் மற்றும் சத்தான காய்கறிகளைச் சாப்பிடலாம். மதிய உணவாக இதைச் சாப்பிட்டு மற்ற வேளைகளில் அல்லது பசிக்கும் போது காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும்.
சனி - புரதச்சத்து
புரதச் சத்துமிக்க கோழி இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள் போன்றவற்றை இன்றைய தினம் மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிடலாம். ஆனால் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்.
ஞாயிறு -இறுதி நாள்
- சிவப்பரிசி சாதம், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடவும்.
- இப்போது உடல் எடை ஓரளவு சமன்நிலைக்கு வந்திருக்கும். ஆனால் இது முதல் படி மட்டும்தான். இதற்கு பின் மேலும் உடல் எடையைக் குறைக்க தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பழக்கம், எட்டு மணி நேரம் உறக்கம் மற்றும் தினமும் 45 நிமிட உடற்பயிற்சி அல்லது யோகாவைக் கடைப்பிடித்தால் உடல் எடையை தானாகவே குறைய ஆரம்பிக்கும்
0 comments:
Post a Comment