தமிழர் சமையற்கலை மிகவும் புகழ் பெற்றதாகும், அதற்கு காரணம் நமது சுவை மிகுந்த மசாலாக்கள் மட்டுமல்ல, நமது சமையற்கலை வழங்கும் பல ஆரோக்கிய நன்மைகள்தான். நமது பாரம்பரிய சமையல் முறைகளும், பழக்கங்களும் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.
நமது முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கமும்தான் காரணம். இப்போதிருக்கும் நமது வாழ்க்கை முறையில் நம்முடைய அத்தியாவசிய தேவை நம்முடைய பாரம்பரிய உணவுமுறைதான். நமது பாரம்பரிய உணவுமுறைகளில் இருந்து இப்பொது நாம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டிய பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு காய்கறிகள்
வீட்டில் காய்கறிகளை வளர்ப்பதன் சிறந்த நன்மை என்னவெனில் இவற்றில் பூச்சிக்கொல்லிகளின் அளவு குறைவாக இருப்பதுடன் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி வீட்டில் வளரும் காய்கறிகள் கடைகளில் இருக்கும் காய்கறிகளை விட 75 சதவீதம் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இது உங்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த வலிமையையும் அதிகரிக்கும்.
உலக்கை மற்றும் குழவி
ரெடிமேட் மசாலா பொருட்கள் நல்லவைதான் ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் ஆரோக்கியமானவை. இதற்கு காரணம் இயற்கை கற்களில் செய்யப்படும் உலக்கை மற்றும் குழவிதான். இந்த கற்களில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் உணவின் சுவையை மட்டுமின்றி அதன் ஆரோக்கியத்தின் அளவையும் அதிகரிக்கும். அதற்கு காரணம் அவற்றில் எந்தவித செயற்கை பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை என்பதால்தான்.
மண்பானை
களிமண் பாத்திரங்கள் அல்லது மண் பாத்திரங்கள் இயற்கையாகவே நீரை குளிர்ச்சியாக்க பயன்படுகிறது. மேலும் இது மனிதர்களின் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இந்த மண்பானை தண்ணீர் குடிப்பது குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீரை விட பலமடங்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.
வெண்கல பாத்திரம்
ஆரோக்கியமாக சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் வெண்கல பாத்திரம் ஒரு சிறந்த தேர்வாகும். பழங்காலத்தில் இது செல்வமிக்க குடும்பங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவின் ஊட்டச்சத்துக்கள் 97 சதவீதம் பாதுகாக்கப்படும். தற்போது சில உணவகங்கள் மீண்டும் வெண்கல பாத்திரத்தில் உணவு பரிமாறும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்.
இரும்பு பாத்திரம்
இரும்பு பாத்திரங்கில் சமைப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும் ஏனெனில் இது உணவு வேகும் வேகத்தை குறைப்பதுடன் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்கிறது. உலகின் பாதுகாப்பான உணவு சமைக்கும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக அமிலங்கள் நிறைந்த உணவுகளை இதில் சமைப்பது நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.
கைகளால் சாப்பிடுவது
ஆயுர்வேதத்தின் படி கைகளால் உணவை எடுத்து உங்கள் வாயில் வைத்து சாப்பிட கைகளை வளைப்பது ஒரு யோகா முத்திரை ஆகும். இது உடலின் உறுப்புகளை செயல்பட வைத்து மூச்சுவிடுவதை சீராக்கும். நமது விரல்கள் உணவை தொடும்போது அதிலிருக்கும் நரம்புகள் அதனை உணர்ந்து மூளைக்கு உணவை செரிமானம் அடையவைக்கும் இரசாயனங்களை வெளியிடும் சிக்னலை அனுப்புகிறது. இதனால்தான் கைகளால் உணவை சப்பிடும்போது அதன் சுவை அதிகமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment