Monday, June 17, 2019

ஜூன் 17  கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1579 – சேர் பிரான்சிஸ் டிறேக் “நோவா அல்பியன்” (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
1631 – முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானாள்.
1839 – ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
1885 – விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1940 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
1944 – பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர்.
1954 – குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 – பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1987 – மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.
2006 – மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1703 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் (இ. 1791)
1942 – மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்
1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்
1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள்
1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)
2001 – டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919)
சிறப்பு நாள்
ஐஸ்லாந்து – தேசிய நாள் (1944)
பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்

0 comments:

Post a Comment