Tuesday, June 4, 2019

டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு விரைவில் 460 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பொறியியல் பணி மற்றும் தமிழ்நாடு மின்னியல் ஆய்வக பணியில் உதவி பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் (உதவிமின் ஆய்வாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவிஇயக்குநர்) 460 காலியிடங் களையும் தமிழ்நாடு கட்டிடக்கலை பணியில் ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பதவியில் 15 காலியிடங்களையும் போட்டித்தேர்வு மூலம் நேரடியாகநிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்புவெளியிட்டுள்ளது. இக்காலியிடங் கள் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட துறைகளில் இடம்பெற்றுள்ளன.உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பதவிக்கு பிஇ (விவசாயம்), பிடெக் (வேளாண் பொறியியல்) மற்றும் பிஇ மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், புரடக்சன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உதவி மின்னியல் ஆய்வாளர்பணிக்கு பிஇ எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.தமிழ்வழியில் படித்தோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உதவி பொறியாளர் (சிவில்) பதவிக்கு பிஇ சிவில் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும் உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பதவிக்கு பிஇ எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும் விண்ணப் பிக்கலாம். தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிக்கு பிஇ மெக்கானிக்கல், புரடக்சன், இண்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பணிக்குபிஆர்க் முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூன் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த 20 சதவீத இடஒதுக்கீடு உதவி பொறியாளர் பதவிக்கும் பொருந்தும் என டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழியிலும் வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ்வழியில் பிஇ, சிவில், பிஇ மெக்கானிக்கல் படித்தோருக்கு உதவி பொறி யாளர் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டிலும் வாய்ப்புகள் உள்ளன.

0 comments:

Post a Comment