- 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியா (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. (Today History june 19)
- 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.
- 1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.
- 1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.
- 1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.
- 1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
- 1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.
- 1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
- 1953 – அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
- 1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர், 218 பேர் காயமடைந்தனர்.
- 2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.
- 1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)
- 1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)
- 1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)
- 1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)
- 1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)
- 1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்
- 1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)
- 1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்
- 1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி
- 1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி
- 1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்
- 1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்
- 1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்
- 1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி
- 1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி
- 1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)
- 1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்
- 1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
- 1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர்
- 1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை
- 1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)
- 1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)
- 1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)
- 1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி
- 1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)
- 2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)
- 2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்
- 2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)
- 2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)
0 comments:
Post a Comment