Friday, May 29, 2020

வீட்டுக் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  1. பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
  2. விண்ணப்பதாரரின் ஒளிப்படம்
  3. ஒளிப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
  4. முகவரிச் சான்று
  5. வருமானச் சான்று
  6. மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
  7. தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
  8. 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
  9. விற்பனைப் பத்திரத்தின் நகல்
  10. சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
  11. உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.
  12. கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)
இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்துவிட்டால், வங்கியில் கடன் வாங்க ஆகும் காலத் தாமதத்தை நிச்சயமாகத் தவிர்க்கலாம். கடனை விரைவாக வாங்கி வீட்டைக் கட்டி முடிக்கலாம்

0 comments:

Post a Comment