புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில்
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி,
முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி,
வழக்கறிஞர்கள் அருள்மொழி, அஜிதா, சுதாராமலிங்கம்,
உளவியலாளர் ஷாலினி,
பத்திரிகையாளர் கவின்மலர்
உள்ளிட்ட 28 முக்கிய பெண் பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 9994368566 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களையும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தக் குழுவில் யாரிடம் நம்பிக்கை கொண்டு பேச விரும்பினாலும், அதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இந்த எண் பெண் ஒருவராலே கையாளப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உளவியல் ரீதியாக மட்டுமில்லாமல், சட்ட உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் உதவத் தயாராக உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படுகிற தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சி.பி.ஐ விசாரணையின்போது இவை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இந்தக் குழுவினரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசியில் அல்லாமல் நேரில் சந்திக்க விரும்புவோர் உசேன் இல்லம், எஸ். 7, கொண்டிசெட்டி தெரு, சென்னை - 600001 என்கிற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
*பொள்ளாச்சியில் மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களும் தொடர்புகொள்ளலாம் .
எந்தக் கட்சி..
எவ்வளவு, பணபலம் அரசியல்,ஜாதி செல்வாக்கானவர்களாக இருந்தாலும் பரவாயில்ல...!
இந்த 'பெண் நாட்டாமை'களிடமிருந்து
யாரும் தப்பிக்கமுடியாது
பெண் பிள்ளைகளே
துணிந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்💐
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.