Saturday, August 17, 2019

 என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்!

நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் எனப்படும் டிரேட் அப்ரண்டிஸ் டிரைனி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிப் பணிகள் மற்றும் காலியிடங்கள்:

1. ஃபிட்டர் - 120
2. டர்னர் - 50
3. மெக்கானிக் - 130
4. எலக்ட்ரீசியன் - 130
5. வயர்மேன் - 120
6. மெக்கானிக் (டீசல்) - 15
7. வெல்டர் - 100
8. பி.ஏ.எஸ்.எஸ்.ஏ - 40
9. அக்கவுண்டன்ட் - 40
10. மெக்கானிக் (டிராக்டர்) - 15
11. கார்ப்பென்டர் - 5
12. பிளம்பர் - 10
13. ஸ்டீனோகிராபர் - 20
14. டாடா எண்ட்ரி ஆப்ரேட்டர் - 40
15. HR அசிஸ்டெண்ட் - 40

மொத்தம் = 875 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 12.08.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2019, மாலை 5.00 மணி வரை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி நாள்: 26.08.2019 மாலை 5.00 மணி.

வயது வரம்பு:

01.10.2019 அன்றுக்குள் 14 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சிக் கால அளவு:

குறைந்தபட்சமாக 12 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 15 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சிகால உதவித்தொகை:

குறைந்தபட்சமாக ரூ.8,766 முதல் அதிகபட்சமாக ரூ.12,524 வரை மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள், பி.காம் / பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) / பி.சி.ஏ / பி.பி.ஏ போன்ற ஏதேனும் ஒரு கல்வித்தகுதியை பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://web.nlcindia.com/ldc032019/ அல்லது https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm - போன்ற ஏதேனும் ஒரு இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 26.08.2019 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலெக்‌ஷன் பாக்ஸ் என்ற பெட்டியிலோ சமர்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி. இந்தியா நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.

குறிப்பு:

1. இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியில் இருப்போர் மீண்டும் பயிற்சிப் பெற தகுதியில்லை.

2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://www.nlcindia.com/new_website/careers/TRADE-ADVT03-2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.