Tuesday, December 24, 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe
தேவையான பொருள்கள்.

வெங்காயம் - 2
தக்காளி - 4
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
தனியாத்தூள் -  அரை ஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை :

வெங்காயத்தை அரைத்து கொள்ளவும். கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும். பச்ச மிளகாயை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.  சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். பின் அதை வடிகட்டி விடவும்.


பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும். இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

0 comments:

Post a Comment