Wednesday, August 14, 2019

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.
அதிகாலையில் வெறும் வயிற்றில்மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர,நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல்,அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும்நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.


பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம்இருமல்இரைப்புமூலம்வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.
பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்



சித்த மருத்துவ வழக்கில் காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்க்காய் பயன்படுத்தி வந்தது அனைவரும் அறிந்த ஒன்றஇன்று ஆராய்ச்சி மூலம் அதை விஞ்ஞானிகளோ நிரூபித்துள்ளனர். ஜ்வயார்ல்யால் இந்ஸ்டிட்யூட் ஆஃப் போஸ்ட்க்ர்யாஜுயேட் மெடிகல் எஜுகேஶந் அந்த்றெஸெஅர்ச்,இஂடியா நடத்த பட்ட ஆய்வில் பாகற்க்காய்இந்சூழின் செய்கையினைத் தூண்டுவதாக கண்டறியப்படுள்ளது.

மேலும்,இதில் வகையான உயிரியல் கலவைகள்- பிஒக்த்திவே காஂபௌஂட் உள்ளதாக கூறுகிறது தே ஃபிலிபீந் டிபார்ட்மெஂட் ஆஃப் ஹெல்த்.இவை ஒரு வகையான புரதம் அம்ப்க் தூண்டிவிடுகிறதாக கண்டறியப்படுள்ளது.இப்புரதம்நீரிழிவு நோயில பாதிக்கபடுகிற க்லூகோஸ் பயன்படுத்தல்ஃப்யுயெல் மெடபாலிஸம் இவை முதலியவைகளை தூண்டிவிடுகிறது. மேலும்,இதில் உள்ள லெக்டிந் ,இன்சுலினை போல் செயல்பட்டு,உடல் திசுக்களில் குளுகோஸ்பயன்படுத்துவதை அதிகபடுத்துவத மட்டுமின்றிமூளையை மட்டுபடுத்தி,பசியை குறைக்கிறது.

நன்றி!!!

0 comments:

Post a Comment