பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.08.19
திருக்குறள்
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
விளக்கம்:
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.
பழமொழி
ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு
An angry person in haste can't exercise calm judgment.
இரண்டொழுக்க பண்புகள்
1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்
2. அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.
பொன்மொழி
சாமார்த்தியம் ஒருவரை மேன்மைப் படுத்துகிறது எனலாம்.பணிவால் மெருகேற்றுகிறது.
கனிவால் அணிசேர்க்கிறது....
---------- வள்ளலார்
பொது அறிவு
1.கடல்களின் ராணி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து
2. காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
பிரிட்டன்
English words & meanings
Venus Flytrap - a carnivores plant
பூச்சி உண்ணும் தாவரம்.
நைட்ரஜன் சத்துக் குறைந்த மண்ணில் வளர்வதால் பூச்சி பிடித்து உண்கின்றன.
ஆரோக்ய வாழ்வு
நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது .இது ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயலை தடுப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது .
Some important abbreviations for students
wt - weight
yd. - yard
நீதிக்கதை
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.
சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.
இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது.
கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கிவிட்டது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தது. கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றது. சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம், அதனால் ஏற முடியவில்லை.
படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே ஏற முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கீழேயே விழுந்து விட்டது.
அதனால் கிணற்றின் மேலே ஏறிவர முடியவில்லையே என எண்ணி மிகவும் வேதனை அடைந்தது. தன் நிலையை நினைத்து, உள்ளே நின்று கத்திக் கொண்டே இருந்தது.
அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது.
""கிணற்றுக்குள் இருந்து தானே ஆட்டின் சப்தம் வருகிறது' என நினைத்த குரங்கு, கிணற்றில் எட்டிப் பார்த்தது. கிணற்றின் உள்ளே ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும், """"எப்படி உள்ளே குதித்தாய்?'' எனக் கேட்டது.
""""தண்ணீர் குடிக்கத்தான் இப்படி கிணற்றுக்குள் இறங்கினேன். ஆனால், மீண்டும் என்னால் ஏறி வர முடியவில்லை.''
அதைக் கேட்ட குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.
""""ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும். ஆராயாமல் இப்படிச் செய்து விட்டு, சிரமப்படக் கூடாது. என்னாலும் உனக்கு உதவ முடியவில்லையே ... இருப்பினும் கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்று விட்டது.
நீதி: கண்களுக்கு பார்த்ததும் அழகாக தோன்றுகின்ற எல்லாத்தையும் உடனே ஆசைபட்டுவிடக்கூடாது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் செயல்படணும். சரியா!
செவ்வாய்
ஆங்கிலம்&கலையும் கைவண்ணமும்
There are seven continents.
The word ""continent"" comes from the Latin ""terra continens"", meaning ""continuous land"".
What am I?
I am circular.
I go up and down.
You can throw me.
You can catch me.
Be careful with me near windows.
Ans: Ball
கலையும் கைவண்ணமும் - 34
கலையும் கைவண்ணமும் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
13.08.2019
* மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டியது: நாளை முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு...விவசாயிகள் மகிழ்ச்சி.
* நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தடை விதித்துள்ளது.
* வரும் பொதுத் தேர்வு முதல் 10ம் வகுப்பு கணக்கு தேர்வை 2 தாள்களாக நடத்த திட்டம்: சிபிஎஸ்இ முடிவு.
* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது.
* ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகிறார்.
Today's Headlines
🌸The water level of Mettur Dam reaches 90 feet: water opening for Delta irrigation from tomorrow ... farmers' delight.
🌸 The Bar Council of India has banned the launch of new law schools for 3 years across the country.
🌸Plan to conduct the CBSE public exam maths subject with 2 paper for 10 TH STD
🌸 India beat West Indies by 59 runs in 2nd ODI
🌸In the women's singles final of the Rogers Cup Tennis Series, US star Serena Williams clashes with Canada's Bianca Andreas.

0 comments:
Post a Comment