Friday, January 4, 2019

தொடக்க கல்வி இயக்குநரகம் தேவையில்லை என்ற நிலை ஏற்படக் கூடும்.  தொடக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்கள் படிப்படியாக ஒழிக்கப்படும்.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் இருக்காது.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கென்று தனி ஊதிய நிலை எண் இருக்காது. அடுத்த ஊதியக் குழுவிலேயே, (2026 ஆம் ஆண்டு) தற்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி வகிப்பவரின், ஊதிய நிலை எண், (தற்போதைய நிலை எண் 15)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிலை எண்ணுடன் (நிலை எண் 10 அல்லது 12) உடன் இணைக்க வாய்ப்பு ஏற்படும்.
தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஆசிரிய சங்கங்கள், வலுவிழந்து படிப்படியாக அழிய நேரிடும். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளுக்காக போராட இயலாத நிலை ஏற்படலாம். இதனால் வருங்காலத்தில் போராட்டங்கள் நிகழ வாய்ப்பு குறைவு.
இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு என்பதே பணி நிறைவு பெறும் வரை இருக்காது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களும், படிப்படியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கும் நிலை ஏற்படக் கூடும். இதன் மூலம் வட்டாரத்தில் உள்ள LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆளுகைக்கு உட்படுத்தும் நிலை ஏற்படலாம்.
மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கப் படுவதால், இடைநிலை ஆசிரியர், அப்பள்ளியில் கடைநிலை ஊழியராக இருக்க நேரிடும்.
சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட, எலிக்கு தலையாக இருப்பது மேல் என்ற பழமொழிக்கு நேர்மாறாக, இதுவரை தொடக்கப் பள்ளிக்கு தலைமைப் பொறுப்பு வகித்த தலைமை ஆசிரியர்கள், தங்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும்.
சங்கப்  பொறுப்பாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, பள்ளிக்கு ஒழுங்காக வராத ஆசிரியர்கள், இனி ஒழுங்காக பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.
தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சரி வர பயில வில்லை என்றால், 6 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேரும் உயர் அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சம்பந்தப் பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களை கேள்வி கேட்க இயலாத நிலை தற்போது உள்ளது. பள்ளிகள் ஒருங்கிணைக்கப் படுவதால், மாணவன் சரியாக பயில வில்லையெனில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.