கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள்.
ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துவிடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.
இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர்.
கோபம் என்றால் என்ன?
கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும்.
உறவு அறுந்து போகும்.
உரிமை ஊஞ்சலாடும்.
நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன?
சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை.
கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.
இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது.
இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.
இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது...
அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.
முதலில் அடுத்தவர்களுக்கு கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள்.
அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.
அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள்.
ஈகோ பார்க்காதீர்கள்.
நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.
கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள்.
அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.
அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம்.
என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.
அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.
வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று.
நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.
அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான்.
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.
நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம் பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.
கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்....
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.