
அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் பணிபுரிந்தார். அவர் மே 31 ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை பி.டி.ஓ.,ஆக பணிபுரிந்த போது தொகுப்பு வீடுகளை தகுதியில்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடவும் முடிவு செய்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வம் கூறியதாவது:சுப்பிரமணியன் மீதான நடவடிக்கை திரும்ப பெற கோரி இன்று (ஜூன் 3) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஜூன் 12 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருப்போம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜூன்16 ல் மாநில செயற்குழு கூடி முடிவு செய்யும்.
0 comments:
Post a Comment