உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை வகித்துக்கொண்ட ஆளுமை நெப்பொலியன் போனபார்ட். அவர் வாட்டர்லூ போரில் தோற்ற இருநூறாவது ஆண்டு இன்று (18-06-1815)
1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோவில் பிறந்த நெப்போலியன் உருவத்தில் சிறியவர், ஆற்றலில் அற்புதமானவர்.
1814ம் ஆண்டு நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியபோதும் சில மாதங்களிலே அங்கிருந்து மீண்டு வந்து இழந்த தன் அரசைக் கைப்பற்றினவர்.
1815ல் நடந்த வாட்டர்லூ போரில் நெப்போலியன் வெற்றி பெற்றிருந்தால் உலக சரித்திரமே மாற்றிப் போடப்பட்டிருக்கும். வெறும் 24மணி நேரத்தில் நெப்போலியனின் போனர்பார்ட்டுடைய தோல்வி பல சரித்திர மாற்றங்களை நிகழ்த்தியது. இதே போலவே எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல் என்று வர்ணிக்கப்படும் மற்றொரு மாவீரன் 'அலெக்ஸாண்டர் தி கிரெட்' .
வாட்டர்லூவில் நெப்போலியன் போனபார்ட் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்கான திறமைகளும் அனுபவங்களும் அவருக்கு உண்டு. அதே போல தேவையற்ற சில கரிசனங்களும் அவருக்கு உண்டு. வாட்டர்லூ தோல்விக்குப் பின் ஆறு ஆண்டுகள் சென் ஹெலெனாத் தீவில் சிறை வைக்கப்பட்டு இறந்தார்
மொத்தத்தில் அவர் ஒரு ஆளுமை. 200 ஆண்டுகள் முன் நிகழ்ந்த அவரது தோல்வியினால் உலக வரலாறே மாறிவிட்டதே!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.