Tuesday, September 17, 2019




ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகும்போது, ஒரு நரியைக் கண்டது. நரியிடம் சிங்கம் "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். நரியும் பயந்தபடியே "நீங்கதான் ராஜா" என்று சொன்னதாம். அதற்கு சிங்கம் "அப்படிச் சொல்லு" என்று சொல்லிவிட்டுப் போனது. பிறகு ஒரு முயலைக் கண்டது. முயலிடம் சிங்கம் "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். அந்த முயலுக்கு தமிழ் தெரியாதாம். இங்லிஷ் மட்டும்தான் தெரியுமாம். "I don't understand. What are you saying?" என்று கேட்டதாம். சிங்கத்துக்கு கொஞ்சம் இங்லிஷ் தெரியும். அது திருப்பி "Who is the king of this jungle?" என்று கேட்டதாம். முயலும் "You are the king" என்று சொன்னதாம்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு Polar Bear வந்ததாம். அதனிடம், சிங்கம் "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். Polar Bear க்கு நோர்வேஜியன் மட்டும்தான் தெரியுமாம். அது "Jeg forstår ikke. Hva sier du?" என்று கேட்டதாம். சிங்கத்துக்கு நோர்வேஜியன் தெரியாது. அதால அது ஒன்றுமே சொல்லாம போனதாம்.

பிறகு கொஞ்ச தூரத்தில் ஒரு யானை இலை சாப்பிட்டுக் கொண்டு இருந்துதாம். சிங்கம் யானையிடம் "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். யானைக்கு சிங்களம் மட்டும்தான் தெரியுமாம். யானை ஒண்டும் பேசாமல், தன்பாட்டுக்கு இலை சாப்பிட்டுக் கொண்டே இருந்துதாம். சிங்கம் திருப்பியும் "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். யானை அப்பவும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்துதாம். சிங்கம் யானையின் தும்பிக்கையை பிடித்து இழுத்து "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். யானைக்கு நல்ல கோபம் வந்துதாம், சிங்கம் யானையின் தும்பிக்கையை பிடித்து இழுத்து "இந்தக் காட்டுக்கு யார் ராஜா?" என்று கேட்டதாம். யானைக்கு நல்ல கோபம் வந்துதாம், சிங்கத்தை தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டுதாம். சிங்கம் தூரத்துல போய் விழுந்து காயமெல்லாம் வந்துதாம். வாயிலிருந்து ரத்தமும் வந்துதாம். சிங்கம் யானையைப் பார்த்து "தெரியாட்டி தெரியாது என்று சொல்லுறதுக்கு என்னை ஏன் தூக்கி வீசுவான்" என்று சொல்லிச்சுதாம்.

அப்ப அந்த வழியால் வந்த நரி "என்ன ராஜா, வாயெல்லாம் சிவந்து இருக்கு. வெத்திலை போட்டீங்களா?" என்று கேட்டதாம். சிங்கத்துக்கு கவலையாய் இருந்தது. "உனக்கு என்ன பைத்தியமா? என்னை யானை தூக்கி வீசியது தெரியாதா? நான் ஏதோ சிங்களம் தெரியாமல் வந்த பிரச்சனையில இருக்கிறன். உனக்கு பகிடியாயிருக்கா?" என்று கேட்டு அழுததாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.