Tuesday, September 17, 2019


லட்டு | laddu

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - அரை கப்
வேர்க்கடலை - 2  ஸ்பூன்
பொட்டுக்கடலை - கால் கப்
வெல்லம் - 3 ஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் - 2
நெய் - 2 ஸ்பூன்




செய்முறை:


முந்திரிப்பருப்பை   4   ஆக  நறுக்கவும். ஏலக்காயை மற்றும் வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் முதலில் ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் வேர்க்கடலை, பொட்டுக்கடலை அடுத்தடுத்து போட்டு வறுத்து எடுத்து எல்லாவற்றையும் ஆற வைக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து பொடித்த பொடியில் ஏலக்காய் தூள், வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.

நெய்யை காயவைத்து உருக்கி, ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கிளறவும்.

இந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும்பொழுதே உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
சுவையான  லட்டு ரெடி

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.