Thursday, February 28, 2019


தேசிய அறிவியல் நாள்!!!

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987 – ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரலாறு
இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அறிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதியைத்தான் தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
நோக்கம்
எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,. அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
—————–
சி.வி.ராமன், ‘ராமன் விளைவை’ கண்டறிந்த தினம். இதுவே இந்தியாவின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவானைக்காவலில் பிறந்த இவர், படிப்பில் பயங்கர சுட்டி. அப்போதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த இவர், இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார்.
பிறகு, இணைப் பேராசிரியராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருக்கிறபொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார். மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம் போகிறபொழுது ‘ஏன் கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருக்கிறது?’ என யோசித்ததன் விளைவுதான் ‘ராமன் விளைவு’ நோக்கிய அவரின் பயணம்.
காம்ப்டன் எக்ஸ் கதிர்கள் சிதறலை பற்றி ஆய்வுசெய்து நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னதும் அது என் கண்ணிற்கு புலப்படும் ஒளியிலும் சாத்தியமாக இருக்க கூடாது என யோசித்தார். அதற்கு விலை மிகுந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியை பிர்லாவிடம் வாங்கித்தர சொல்லி கேட்டார். “கண்டிப்பா நோபல் பரிசு நமக்குதான்!” என அறிவித்து களத்தில் இறங்கி சாதித்து காட்டினார்.
நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த விழா கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன?அதற்கு காரணமானவர் யார்? அவர் படித்த கல்லூரி ஆய்வகத்தின் தற்போதைய நிலை என்ன?
பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இந்த நிறமாலை மானியில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் அமர்ந்திருந்த இதே ஆய்வகத்தில்தான் தனது இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பின் போது ஆய்வு செய்தார் உலகம் போற்றும் ஒரு அறிவியல் அறிஞர்.
அவர் வேறு யாருமல்ல… சென்னை மாநிலக் கல்லூரியில் 1904 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இயற்பியல் அறிஞர் சர். சி.வி. இராமன்.
கடலின் நீல நிறத்திற்கு காரணம் ஒளிச்சிதறலே என்பதையும், முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது 7 நிறங்களாக பிரியும் என்பதையும் கண்டுபிடித்து 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றார். இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28 ஆம் தேதியைதான் தேசிய அறிவியல் தினமாக நம் நாட்டில் கொண்டாடுகிறோம். அந்த கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாக விளங்கிய ஆய்வகங்களில் ஒன்றுதான் இந்த மாநிலக் கல்லூரியின் இயற்பியல் ஆய்வகம்.
எங்களுக்கெல்லாம் இது பெருமை: இராமன் ஆய்வு செய்த ஆய்வகத்தையும், அவரும் அவரது மனைவியும் படித்த அதே பழமையான வகுப்பறையிலும் படித்து வரும் மாணவர்கள் அவரின் சாதனை தங்களுக்கு உத்வேகத்தை அளித்து வருவதாக கூறுகின்றனர்.
அடிப்படை அறிவியல் மீதான ஆர்வம் குறைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், அதைப்பற்றிய விழிப்புணர்விற்காக இன்று நாடு முழுவதும் பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது எனவும் கண்டார். அவை:
* படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி (ஆற்றல் இழப்பு இல்லை).
* முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள் (ஆற்றல் இழப்பு)
* முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள் (ஆற்றல் அதிகரிப்பு)
நோபல் பரிசை அறிவியல் துறையில் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமை அவரை வந்து சேர்ந்தது; ஜூலை மாதமே நோபல் பரிசு தனக்குத்தான் என உறுதியாக நம்பி டிக்கெட் எல்லாம் புக் செய்தார் ராமன்.
ராமன் விளைவு பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில், சட்போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல், அணுக்கருக் கழிவுகளை தொலைவில் இருந்து ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது.
இவரின் கவனிப்பில் இந்திய அறிவியல் கழகம் சிறப்பான அமைப்பாக உருவெடுத்தது. நம் நாடு அறிவியலில் முன்னணியில் நிற்க குழந்தைகளை ஐந்து வயதில் இருந்தே விஞ்ஞானிகள் என மதித்து நடத்த வேண்டும் என்ற இவரின் கனவு இன்னமும் கானல் நீராகவே இருக்கிறது.
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும்
நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கவியரசரும் கேட்டு, பதில் சொல்லாமல் விட்டதை அறிவியல் ரீதியாக, நிரூபித்தவர் சர் சி.வி. ராமன் அவர்கள்.
திடம், திரவம், மற்றும் வாயு இந்த 3 நிலைகளிலும் உள்ள மூலக்கூறுகள், தம்முள் ஊடுறுவும் ஒளியை சிதற அடிக்கின்றது. இப்படி சிதறிய மூலக்கூறுகள், ஒளியின் அலை நீளத்தை மாற்றுவது, ராமன் விளைவு (ராமன் எபெக்ட்) எனப்படும்.
இவ்வாறக சிதற அடிக்கப்படும் ஒளிக்கற்றைகளான “ராமன் ஸ்பெக்ட்ரம்” ( இது 2க் அல்ல.! வேற ஸ்பெக்ட்ரம்), மூலக்கூறுகளின் கட்டமைப்பை அறிய உதவுகிறது. இத்தகைய இயல்பியல் தத்துவம், விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருவது சரித்திரம்.
சர் சி.வி. ராமன் அவர்கள் பற்றி 2 நினைவு கூறல்களை, விரிவாக, ஏற்கனவே பார்த்தோம்.
1. ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி.!
2. இந்தியாவிலும் & அறிவியலுக்காகவும், நோபல் விருது பெற்ற‌ முதல் விஞ்ஞானி .
3. தமிழகத்தைச் சேர்ந்த 3 நோபல் விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.
4. “பாரத ரத்னா” & “நோபல் பரிசு” இரண்டையும் ஒன்றாக பெற்ர ஒரே இந்திய விஞ்ஞானி, சரித்திரத்தில் இவர் மட்டுமே.
ராமன் விளைவை, அவர் உலகிற்கு உணர்த்திய பிப்ரவரி 28ம் தேதி, இன்று “தேசிய அறிவியல் தினமாக” கடைபிடிக்கப் படுகிரது.

0 comments:

Post a Comment