Saturday, February 9, 2019


அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் அரிய வகையான கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோட்டப்பகுதியொன்றில் குறித்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி கடந்த வாரமளவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை வேனெஸ்பொரோவைச் சேர்ந்த ஊர்வனவியல் நிபுணர் ஜே.டி.லியோஃபர் (JD Kleopfer) பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து லியோஃபர் தனது முகநூலில், ஆய்வின் முடிவுகள் சார்ந்த குறிப்புகளை பதிவிட்டுள்ளார். “காடுகளில் வாழும் விஷம் நிறைந்த இரட்டை தலை ஊர்வன வகைகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஏனென்றால், அவை நீண்ட காலம் வாழக்கூடியவை அல்ல.
இரண்டு தலைகளுடன் நீண்ட காலம் வாழ்வதற்கு இந்த வகையான உயிரினங்கள் மிகுந்த சவால்களை எதிர்கொள்கின்றன” என்று அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவை ஆக்ரோஷமான விலங்குகள் அல்ல, தலைகளைக் கொண்டு தாக்கக் கூடிய தன்மையை கொண்டுள்ளன. வேர்ஜியானவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இருதலை பாம்பு வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment