வாசனைச் செடிகள் மட்டுமே உங்கள் சுவை மொட்டுக்களை தூண்டும் ஆனால், அதிலிருந்து தாவர ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய தாவர எண்ணெய்கள், ஆண்டிஆக்சிடண்டுகள், கனிமங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அத்தியாவசியமாக தேவைப்படும் வைட்டமின்கள் ஒரு ஈர்க்கக்கூடிய பட்டியலில் இயற்றப்படுகின்றன. வாசனைச் செடிகளுக்கு மருத்துவத்தில் கூடுதல் தொடர்பு உள்ளது.
மிளகு மருத்துவ குணங்கள்:
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”
மிளகு “கிங் ஆப் ஸ்பைசஸ்” என்று குறிப்பிடப்படுகிறது.
- மிளகு தூள் (ஒரு தேக்கரண்டி), சர்க்கரை (ஒரு தேக்கரண்டி), தேன் (ஒரு தேக்கரண்டி) குழைத்து சாப்பிட்டால் நீண்ட நாள் இருமல் சரியாகிவிடும்.
- மிளகுதூள் (ஒரு தேக்கரண்டி), வெல்லம் (ஒரு தேக்கரண்டி), தயிர் (ஒரு தேக்கரண்டி) – காலையில் குழைத்து தொடர்ந்து சாப்பிட்டால் தலை பாரம், மூக்கு அடைப்பு ஆகியவை குணமாகும்.
- பத்து மிளகு, ஒரு வெற்றிலையில் உள்ளே வைத்து தினமும் காலையில் மென்று சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்:
நறுமண பயிர்களின் ராணி – ஏலக்காய்
இதன் நறுமணத்தை நுகரும் பொழுது நமக்கு நுகர்வு திறனை அதிகரிக்கும், சுவாச அடைப்பை சரி செய்யும்.
- ஏலக்காய், திப்பிலி ஆகிவற்றை சமஅளவு பொன் வறுவலாக வறுத்து அதனை தூள் செய்து கொள்ளவேண்டும். அதிலிருந்து தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் சரி ஆகும்.
- ஏலக்காய் தூள் ஒரு தேக்கரண்டி, அரை குவளை பெரிய நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பு, சிறுநீர் பையில் கல் உற்பத்தி ஆவது இவை அனைத்தும் குணமாகும்.
- ஏலக்காய் தூள், ஆட்டின் சிறுநீருடன் குழைத்து கண்களில் மை போன்று போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
மஞ்சள் மருத்துவ குணங்கள்:
மஞ்சள் நோய் எதிர்பாற்றலை வளர்க்கும். கிருமி நாசுனி ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
- மஞ்சள் தூள் (ஒரு தேக்கரண்டி), நெல்லிக்காய் சாறு (இரண்டு தேக்கரண்டி) ஆகியவற்றை குழைத்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு கட்டுப்பாட்டில் வரும். தொடக்ககால சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
- மஞ்சள் தூள் (இரண்டு தேக்கரண்டி), பசு கோமியம், தேன் (ஒரு தேக்கரண்டி) கலந்து சாப்பிட்டால் வெண்தோள், தொழுநோய் குணமாகும் – 45நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாவதை பார்க்கலாம்.
- ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், வெல்லம் (ஒரு தேக்கரண்டி), பசு கோமியம் ஆகியவற்றை குழைத்து சாப்பிட்டு வந்தால் யானைகால் நோய் குணமாகும்.
- மரமஞ்சள் தூள் (ஒரு தேக்கரண்டி), தேன் (ஒரு தேக்கரண்டி) ஆகியவற்றை கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கிராம்பு மருத்துவ குணங்கள்:
- தீராத வாந்தி, தொடர்ச்சியாக வாந்தியை நிறுத்தக்கூடிய ஆற்றல் உண்டு.
- ஒரு தேக்கரண்டி கிராம்பு தூள், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
- கர்ப்பகாலத்தில் பெண்கள் கிராம்பு தைலம் நான்கு சொட்டு தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நின்றுவிடும்.
- கிராம்பு தையலத்தை பல் வலியை குணப்படுத்தும். பற்களில் இருக்கும் பூச்சிகளை கொன்றுவிடும்.
வெந்தயம் மருத்துவ குணங்கள்:
வெந்த + அயம் = வெந்தயம். அயம் என்றால் இரும்பு என்று அர்த்தம். வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து நேரடியாக நம் உடலுக்கு சென்று அடைகிறது.
- வெந்தயத்தை பொன் வறுவலாக வறுத்து (ஒரு கைப்பிடி), இரண்டு சொம்பு தண்ணீரில் போட்டு ஒரு சொம்பு அளவுக்கு சுண்ட வைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு காய்ச்சி காலையில் சாப்பிட்டால் இயற்கையாக இன்சுலின் சுரக்கும் ஆற்றல் உண்டாகும்.
- வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். இரத்தசோகை குணமாகும்.
- முள் குத்திய இடத்தில் வெந்தயத்தை அரைத்து அதன் விழுதை வைத்து வந்தால் உள்ளே இருக்கும் முள் வந்துவிடும்.
சோம்பு மருத்துவ குணங்கள்:
- சோம்பு செரிமானத்திற்கு மிகவும் அவசியமானதாகும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆனி ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு தேக்கரண்டி அளவு சோம்புவை பொன் வறுவலாக வறுத்து காலையும் மாலையும் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த வருடம் முழுக்க நோயின்றி வாழலாம்.
- சோம்பு, சுக்கு, தேன், கல்கண்டு தூள் – சமஅளவாக குழைத்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நோயை தவிர்க்கலாம்.
- பித்தப்பை பாதிப்பு அடைந்தால் – சோம்பு பொன் வறுவலாக வறுத்து 45நாட்கள் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் பித்தப்பை பாதிப்பு குறைக்கலாம்.
சீரகம் மருத்துவ குணங்கள்:
- சீரகத்தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள டாக்சின்கள் வெளியேற்றப்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலம் தூய்மை பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- சீரகத்தண்ணீரை குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்:
- ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன் ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் குடல்வாயு குணமாகும்.
- இரண்டு சொட்டு ஜாதிக்காய் எண்ணெய்யை வலியுள்ள இடத்தில் பூச பல் வலி குணமாகும்.
- ஜாதிக்காய் பொடி ½ கிராம் பாலில் கலந்து நாளுக்கு இரண்டு வேலை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். இரைப்பை பலப்படும்.
- பட்டாணி அளவு ஜாதிக்காயை எடுத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் காலரா, வாந்தி, பேதி சரியாகும்.
- ஜாதிக்காயை பொடி செய்து ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை, அதிமறதி, விக்கல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.
- ஜாதிக்காய் தூளுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
- ஜாதிக்காய் உடன் சந்தனத்தை உரசி அதனை பருக்களின் மேல் தடவி வந்தால் பருக்கள், கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
இஞ்சி மருத்துவ குணங்கள்
- இஞ்சி சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள் தீரும், உடம்பு இழைக்கும்.
- இஞ்சி சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வாத கோளாறு குணமாகும்.
- இஞ்சியை புதினாவுடன் துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம், அஜீரணம் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
- இஞ்சியுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும்.
- இஞ்சி சாறு, துளசி சாறு, தேன் ஆகியவற்றை சமஅளவு சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
கொத்தமல்லி மருத்துவ குணங்கள்:
உணவை மணக்க செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு.
- கொத்தமல்லி இலையை துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புசத்து அதிகமாகும். நோய் எதிர்ப்பு சத்து அதிகரிக்கும்.
- நாலு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை போட்டு காய்ச்சி குடித்தால் உடல் களைப்பு குணமாகும்.
லவங்கப்பட்டை மருத்துவ குணங்கள்:
- 200 மி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி லவங்கப்பட்டை தூள் கலந்து கொதிக்க வைத்து இறக்கி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கபம் மற்றும் மூச்சு அடைப்பு நீங்கும்.
- அரை தேக்கரண்டி லவங்கப்பட்டை தூளை தேனில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சதை வலி குறையும்
- லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் பொடி செய்து வைத்து கொள்ளவேண்டும். 100 மி தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி வயிற்று உபாதைகள் நீங்கும்.
- லவங்கப்பட்டையை காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு குறையு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.