Thursday, July 18, 2019

குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.

நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. 


குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்படுகிறது.
வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். 


இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். 


தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம். 

 போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும். 

குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள். 

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். 

இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.