Monday, April 8, 2019


திருக்குறள்


அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

பழமொழி

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

Even a crow thinks its child is Golden

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.

   - திரு.வி.க

 பொது அறிவு

1.இந்திய நாடாளுமன்ற அவைகள் எந்த சட்ட விதியின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளன?

 இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81

2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படும் தமிழ் அறிஞர் யார்?

 ரா.பி.சேதுப்பிள்ளை

குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது  உங்களுக்கு தெரியுமா?



1. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு.

2. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.

3. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம்  பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

English words and Meaning

Loin cloth.       வேட்டி,
கச்சைத்துணி
Package.   மூட்டை,கட்டு
Squash.     பிழிதல்,
வீழ்த்துதல்
Withstand.   எதிர்த்தல்,
தடுத்தல்
Ill will(இல்வில்)   பகை,
தீய எண்ணம்

அறிவியல் விந்தைகள்

விண்மீன்
Star, நாள்மீன், நட்சத்திரம், உடு என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும்.
*இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. *பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும்.
*இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். எனினும் சூரியன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. *அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; *பொதுவாக அனைத்து விண்மீன்களும் ஒளி, வெப்பம், புற ஊதாக் கதிர்கள், எக்சு ரே - கதிர்கள் மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன.

Some important  abbreviations for students

* NABARD   -  National Bank for Agriculture and Rural Development. (It helps rural development by providing re-finance facility).

* NAG    - National Air Guard

நீதிக்கதை

தெனாலி ராமன் கதைகள் – நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை
தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். ” இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?” இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.” அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது.” என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது.” என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” ”

வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.””அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்.”என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை “தொபுகடீர்” என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்.”இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? “” அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்.”

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்.”இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?” என்றார் அரசர் வருத்தத்தோடு. “அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. ” என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

0 comments:

Post a Comment