நீங்கள் தூங்கும் நேரத்தை வைத்து உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு தெரியுமா இது உங்கள் உடலில் உள்ள அதீத சக்தியால் தான் நடக்கிறது என்பது? நாம் உறக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம் நமது உடலில் உள்ள அதீத ஆற்றலின் வெளிப்பாடு என நம்பப்படுகிறது.
9 மணி முதல் 11 மணிக்குள்
9 மணி முதல் 11 மணி வரையிலான நேரம் தான் பெரும்பாலானோர் தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு கவலையும், மன அழுத்தமும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். நீங்கள் தியானம் செய்யலாம்.
11 மணி முதல் 1 மணி வரை
நீங்கள் இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் இருக்கும் நேரத்தில் விழித்துக்கொள்பவரானால், உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஏமாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நேர்மறையான மந்திரங்களும், மன்னித்தலும் பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
1 மணி முதல் 3 மணி வரை
இந்த ஆற்றல் மெரிடியன் நுரையீரலுடன் சம்பந்தப்பட்டது. நீங்கள் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள் விழித்துக்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு அதிகமாக கோபம் இருப்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் தூங்கும் முன் குளிர்ந்த நீரை குடித்து விட்டு உறங்கலாம், யோகா செய்யலாம்.
3 முதல் 5 மணி வரை
நீங்கள் மூன்று முதல் 5 மணிக்குள் எழுந்திருப்பவராக இருந்தால், ஒரு செயலை செய்ய தூண்டு அதீத தெய்வீக ஆற்றல் உங்களை எழுப்புகிறது. நீங்கள் மேன்மையான செயல்களை செய்வதில் வல்லமை பெற்றிருப்பிர்கள். மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் மெதுவாக சுவாசிக்கலாம். உடற்பயிற்சி மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு அவசியம்.
5 மணி முதல் 7 மணி வரை
இந்த நேரத்தில் விழிப்பவர்களுக்கு உணர்ச்சி அடைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நமது உடல் மிகவும் அற்புதமானதாகும். நீங்கள் உங்கள் உடல் சொல்வதை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், உங்களால் மனதையும் உடலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்
0 comments:
Post a Comment