Tuesday, November 27, 2018

தமிழகத்தில் உள்ள அணைகளில் 73 சதவீத நீர் நிரம்பி உள்ளது

கஜா புயல்  மழையால் மாநிலத்தில் உள்ள  முக்கிய அணைகளில் நீர்மட்டம் 73 சதவீதம் நிரம்பி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட நிலைமை மிகச் சிறந்தது என்றாலும், ஒரு வறட்சி ஆண்டாக கருதப்படுகிறது. சென்னை குடிநீர் நீர்த்தேக்கங்கள் வெள்ளிக்கிழமை வரை 15% சேமிப்புடன் மட்டுமே  உள்ளன என கவலை கொண்டுள்ளன.

பருவமழை 28.5 செ.மீ., மழைக்காலத்தில் 32.5 செ.மீ. மழை பெய்துள்ளது. 32 மாவட்டங்களில், கடலோர மற்றும் மேற்கு பகுதி  12 மாவட்டங்களில்  அதிகமாக மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 42 செ.மீ. மழை பெய்துள்ளது .

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு  மொத்தம் 5.51 டி.எம்.சி. என்ற கொள்ளளவில்  3.77 டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் சேமிப்பு உள்ளது.

அதே மாவட்டத்தில் மற்றொரு பெரிய நீர்த்தேக்கமான  பாபநாசம் 75 சதவீத நீர்  சேமித்து வைத்திருக்கிறது.

நீர்த்தேக்கங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையளவில்  மணிமுத்தாறு 4.9 செ.மீ.  பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் சாத்தனூர் 2.38 செ.மீ ஆகும்.

 டெல்டா பிராந்தியத்தின் வாழ்வாதாரமான மேட்டூர் 67.31 டி.எம்.சி. நீர் உள்ளது வினாடிக்கு  4,643 கன அடி தண்ணீர் வருகிறது.

டெல்டாவில் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆகிய அணைகளுக்கு முறையே 2,231 கனசதுர அடி  மற்றும் 758  கனசதுர அடி நீர் வருகிறது.

ராமநாதபுரம் , சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து தெற்கு மாவட்டங்களுக்கு நீர்வழங்கும் முல்லைப்பெரியாறு நல்ல சேமிப்புடன் உள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு நீர் வழங்கும் பரம்பிக்குளம்-அழியார்  84 சதவீதமும் 90 சதவீதமும் நீர்  சேமித்து வைத்திருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களில் வங்காள விரிகுடாவின் ஒரு  குறைந்த அழுத்த மழையால் பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ் மற்றும் செம்பரம்பாக்கம்  நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பு அதிகரித்து உள்ளது.  

ரெட் ஹில்ஸின் நீர்த்தேக்கம் பகுதியில் 5.7 செ.மீ மழைப்பொழிவு  ஏற்பட்டு உள்ளது.சோழவரம் 5.9 செ.மீ மழை பெய்தது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.