சல்மான், ட்ரவுட், சர்டைன்ஸ் உள்ளிட்ட மீன்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்புகளை பெரிதும் குறைக்கிறது. இதுதொடர்பாக லா ட்ரோபே பல்கலைக்கழகத்தின் கிளினிகல் டிரையல் மேற்கொண்ட ஆய்வு ”ஜார்னல் ஆப் ஹூமன் நூட்ரிசன் அண்ட் டயட்ரிக்ஸ்” இதழில் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஆஸ்துமா உள்ள குழந்தைகள் ஃபேட்டி ஃபிஷ் அடங்கிய டயட் உணவை உண்ண வேண்டும். இந்த ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை 6 மாதங்கள் தொடர்ந்தால், நுரையீரல் செயல்பாட்டில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
இதுகுறித்து பேசிய மரியா பாபாமைக்கல், ஆரோக்கிய உணவு என்பது குழந்தைகளுக்கான ஆஸ்துமாவிற்கு மிகச்சிறந்த சிகிச்சையாக இருக்கும். கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகள் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை அதிகப்படுத்தி விடுகிறது.
எனவே ஆரோக்கிய உணவு பழக்க வழக்கத்தின் மூலம் ஆஸ்துமா பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம். ஃபேட்டி ஃபிஷ்ஷில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
வாரத்திற்கு இருமுறை மீன் உட்கொண்டால், ஆஸ்துமா பாதித்த குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படும் என்றார். இதனை பேராசிரியர் கேதரின் இட்சியோபவுலஸ் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாவர உணவு மற்றும் ஆய்லி மீன்கள் குழந்தைகளுக்கான ஆஸ்துமா பாதிப்பை பெரிதும் குறைக்கும் என்கிறார். ஆஸ்துமா என்பது இளம் வயது நபர்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் சுவாசப் பாதிப்பு ஆகும்.
உலகம் முழுவதும் ஆஸ்துமா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக பல்வேறு புதிய சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.