Monday, November 19, 2018




👨சர்வதேச ஆண்கள் தினம்👨
👨 சர்வதேச ஆண்கள் தினம் (ஐவெநசயெவழையெட ஆநn'ள னுயல) ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.

ஆண் என்பவன் யார்?

👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்...

👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்...

👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்...

👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்...

👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்...

👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்...

👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்...

👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்...

ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் :

👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 

👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 

👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 

👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 

👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்"

👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்"

👨 இதுதான் ஆண்களின் உலகம் !!

👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!!

ஆண்

அழத் தெரியாதவன் அல்ல...
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன்...

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன்...

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன்...

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன்...

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன்...

கரடுமுரடானவன் அல்ல
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன்...

இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்...

👨ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!👨

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.