ஆணுக்குப் பெண் சமமானவள் அல்ல...
ஏனெனில் ஆணை விட அனைத்து வகையிலும் மேம்பட்டவளே பெண்...
ஆண்களால் இட்டுக் கட்டப்பட்ட மதங்களும், புராணங்களுமே பெண்ணை ஏதுமறியாதவளாக, உபயோகமற்றவளாக, இச்சைக்கு மட்டும் பயன்படும் போகப் பொருளாகக் கட்டமைத்தன...
(கோயிலின் வெளியே சங்கிலியால் பூட்டப்பட்ட யானைக்கு காட்டின் அரசனான சிங்கத்தையே தூக்கி வீசும் அளவு பலம் இருந்தும் பாகனின் சிறு குச்சிக்கு தன்னைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதென்று அதன் மனதில் பதிய வைத்தது போல
பெண்ணையும் பலவீனமான உயிரியாக பல நூற்றாண்டுகளாக கட்டமைத்தது மதங்களும், புனித நூல்களும், புராணங்களுமே...)
இயற்கை பெண்ணை தான் முதலில் தேர்ந்தெடுத்தது... பெண்ணிலிருந்தே ஆண் உருவானான்...ஆகவே தான் பெண்ணை சார்ந்தே ஆண்களால் இயங்க முடிகிறது,
ஏதேனும் ஒரு உறவின் மூலம் பெண்கள் வழியேதான் ஆண் இயங்குகிறான்.
பெண் என்பவள்
பூவல்ல
நிலவல்ல
தேவதையல்ல
கடவுளல்ல
இன்ன பிறவுமல்ல...
பெண் என்பவள்
இயற்கை
இயக்கம்
பரிணாமம்
நிர்வாகம்
மனோதிடம்
தலைமை
இவையனைத்தும் ஒருங்கே பெற்றவள்...
பெண் என்பவள் பெண்...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.