Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கோப்பை நிறைய சாலட்களை சாப்பிட வேண்டும்.
அதிக நியூட்ரியன்ட்ஸ், விட்டமின்கள் நிறைந்திருக்கும் இவைகள் உங்களுக்கு, முழுமையான உணர்வைத் தரும். ஆனால் சில பொருட்களை சாலட்டில் சேர்க்கமல் விட்டால், அது சீக்கிரம் உங்களுக்கு பசியைத் தரும்.
அதனால் சாலட்களில் என்னென்ன சேர்க்க வேண்டும் என பார்க்கலாம்.
எண்ணெய்
சாலட்டின் மேற்புரத்தை ஃபேட் ஃப்ரீ எண்ணெய்யால் அலங்கரித்துக் கொள்ளவும். கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யில் அதிக கரோட்டினாய்ட்ஸ் மற்றும் விட்டமி ஏ அதில் அதிகமுள்ளது.
அன் சாச்சுடேட்டட் ஃபேட்டி ஆசிட் தொப்பையைக் குறைத்து உங்களை முழுமையாக உணர வைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
காய்கறி
பசலை, வெள்ளரிக்காய், போன்றவற்றை சாலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு கேரட், பீட்ரூட் ஆகியவற்றையும் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
நிறைய விட்டமின்களையும், மினரல்களையும் சேர்த்து சாப்பிடும் போது, உடலில் பல மாற்றங்கள் உண்டாகும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
காய்கறிகளுடன் துளசி போன்ற மூலிகைகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீஸ்
உடல் எடையைக் குறைக்கும் போது சீஸ் சேர்த்துக் கொள்வது நல்லதல்ல என பெரும்பாலானோர் கூறுவார்கள். ஆனால், இதில் உண்மையில்லை. சீஸில் கொழுப்பை குறைக்கும் கால்சியம் அதிகமுள்ளது. இது ஆரோக்கியமான முறையில் எடை குறைய உதவும்.
ஆகையால் பார்மீசன் அல்லது செடர் சீஸை சாலட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரோட்டீன்
சில கிராம் அளவுக்கு கிரில் சிக்கன், சாலமன் மீன் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சாலட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களது தசைகள் வலுவாகும். ஆனால் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.
பொரித்த நட்ஸ் வேண்டாம்
உப்பு சேர்த்து வறுத்தோ, பொரித்தோ பேக் செய்யப்பட்டிருக்கும் நட்ஸ்கள் சுவையாக இருக்கும், ஆனால் அவை சாலட்டிற்கு உகந்ததல்ல. அதனால் மொறு மொறுவென ஏதாவது வேண்டுமென நினைத்தால், பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.