Saturday, May 4, 2019



உங்கள் பிள்ளைக்கு விளையாட்டு துறையில் ஆர்வமா?

அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் முறையாக பயிற்சி கொடுத்தால், அவர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள்.

 சிறப்பம்சம்

 அரசின் செலவில்
✩ பயிற்சி,
✩ படிப்பு,
✩ உணவு,
✩ விடுதி வசதி,
✩ மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க அழைத்துச் செல்லுதல்.


● தலைசிறந்த பயிற்சியாளர்களிடம் நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு.

● சத்தான உணவு Diet ● முறையான பயிற்சி,
இந்த விடுதிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு இந்திய அணி சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கலாம்.

 யார் இதில் சேரலாம்?

வரும் கல்வி ஆண்டில் 7, 8, 9, 11 வகுப்பு படிக்க இருக்கும், விளையாட்டில் ஆர்வமுடைய இரு பால் மாணவர்களும் சேரலாம்.

 விளையாட்டு விடுதிகள் Boys

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல்

 விளையாட்டு விடுதிகள் Girls

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும்  சென்னை.

சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 08.05.2019 முதல் 10.05.2019 வரை நடைபெற உள்ளது. 

மாணவர்களுக்கான விளையாட்டுகள்

1. தடகளம்,
2. இறகுப்பந்து,
3. கூடைப்பந்து,
4. குத்துச்சண்டை,
5. கிரிக்கெட்,
6. கால்பந்து,
7. வாள்சண்டை, 
8. ஜிம்னாஸ்டிக்ஸ்,
9. கைப்பந்து,
10. வளைகோல்பந்து, 11. நீச்சல்,
12. டேக்வோண்டோ,
13. கையுந்துப்பந்து, 14. பளுதூக்குதல்,
15.கபடி,
16. மேசைப்பந்து,
17. டென்னிஸ்,
18. ஜூடோ,
19. ஸ்குவாஷ்,
20. வில்வித்தை

மாணவிகளுக்கான விளையாட்டுகள்

1. தடகளம்,
2. இறகுப்பந்து,
3. கூடைப்பந்து,
4. குத்துச்சண்டை,
5. கால்பந்து,
6. வாள்சண்டை,
7. கைப்பந்து,
8. வளைகோல்பந்து,
9. நீச்சல்,
10. டேக்வோண்டோ,
11. கையுந்துப்பந்து, 12. பளுதூக்குதல்,
13.கபடி,
14. டென்னிஸ்,
15. ஜூடோ,
16. ஸ்குவாஷ்

மேற்குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்களும் சேரலாம்.

◎ ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், மாணவர்களின் உடற்திறன், விளையாட்டுத்திறன் சோதிக்கப்படும்.

இதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

இந்த விடுதிகளுக்கு அருகில் இருக்கும் சிறந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க வைக்கப்படுவர். அப்பள்ளியின் படிப்பக் கட்டணத்தை மட்டும் பெற்றோர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2019

மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் தேதிகள்: 08.05.2019 முதல் 10.05.2019 வரை.

விவரங்களுக்கு: www.sdat.tn.gov.in

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.