Friday, December 14, 2018




சிக்கன வழிமுறைகள்:
1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம்.

2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்!
3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது.
5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

6. பிரஷர் குக்கர் மூலம் சமைக்கவும் ஏனெனில் அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது.

7. சமயல் பொருளில் அதிக தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனிலி அது கொதிப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும்.
8. மைக்ரோ வேவ் அடுப்பை பயன்படுத்தலாம். ஆனால் இந்திய சமயலுக்கு அது சரிப்பட்டு வராது என்றால் ஹைபிரிட் மாடலை வாங்கி வைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவை பயன்படுத்தி அரை வேக்காடு செய்து கொண்ட பிறகு கேஸ் பர்னருக்கு மாற்றினால் பெருமளவு கேஸ் மிச்சம் செய்யலாம்.

9. தண்ணீர் கொதிக்கவைக்கவேண்டுமென்றால் அடிக்கடி கேசை திறக்காமல் தெர்மாஸ் பாட்டிலை பயன்படுத்தவும்.
10. ரெகுலேட்டர், பைப்கள், பர்னர் ஆகியவற்றில் லீக் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்யவும். மேலும் காரியம் முடிந்தவுடன் ரெகுலேட்டர் ஸுவிட்சை ஆஃப் செய்து விடுவதை கவனமாகச் செய்யவும்.

இவை அனைத்தும் செய்து ஓரளவுக்கு மிச்சம் செய்ய முடிந்தால் நல்லது. இல்லையெனில் பழைய காலம் போல் விறகடுப்பிற்கு மாறவேண்டியதுதான்! விறகு விற்பனை அமோகமான பிறகு அதிலும் அயல்நாட்டு முதலீட்டை வரவேற்று அதன் தலையிலும் நம் அரசு கை வைக்கும். ஆனால் அதற்குள் ஓரளவுக்கு நாம் சுதாரித்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.