
புதுக்கோட்டை,டிச.17:
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவியருக்கான சத்துணவு,உடல்நலம்,மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண் ஆசிரியைகளுக்கான ஒரு நாள் பயிற்சி புதுக்கோட்டை லேனா விளக்கு மவுண்ட் சீயோன் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் சி.பழனிவேலு வரவேற்றுப் பேசினார்.
பயிற்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையேற்று தொடங்கி வைத்துப் பேசியதாவது:மாணவியர்களுக்கு ஆசிரியைகள் சத்துணவு ,சுகாதாரம்,உடல்நலம் குறித்த ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்றார்.
மகப்பேறுவியல் மற்றும் மகளிர் நல மருத்துவர் ஜானகி ரவிக்குமார் பெண்களின் உடல்நலம் குறித்த கருத்துரை வழங்கினார்.மாவட்ட உளவியல் ஆலோசகர் நிர்மல்குமார் மாணவியர் மனநலம் குறித்த கருத்துரை வழங்கினார்.
பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 202 பள்ளிகளிலிருந்து 351 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் சி.பன்னீர்ச்செல்வம் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment