Wednesday, December 19, 2018




மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->


2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது*
*இது தொடர்பாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணை*
*ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்மைக் காலமாக பெற்றோர் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாகன வசதி, சீருடை உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேருவது குறைந்து வருகிறது*
*அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது*
*மாண்டிசோரி முறையில்*
*இந்தப் பள்ளிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர்*
*இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கான கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி பெற்றோருக்குச் செலவில்லாமல் அளிக்கப்பட உள்ளது*
*தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52 ஆயிரத்து 933 மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க அனுமதிக்கப்படுகிறது*
*சீருடைகள்- காலணிகள்*
*அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக்கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன*
*சமூக நலத்துறை மூலம் 2,381 அங்கன்வாடி மையங்களுக்கும் கல்வி கற்பதற்கான பொருள்கள், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் உபகரணங்கள், கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன*
*ரூ.7.73 கோடி ஒதுக்கீடு*
*இத் திட்டத்துக்காக வரும் கல்வியாண்டுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*
*இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரமும், சமூகநலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*
*இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடங்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளன*
*எந்தெந்த வயதுகளில்*
*எல்.கே.ஜி. வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளையும், யு.கே.ஜி. வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளையும்*
*சேர்க்கலாம்*
*எந்தந்த மாவட்டங்களில் எத்தனை மாணவர்கள்?*
*தமிழகத்தில் மாவட்ட வாரியாக அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படவுள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறித்து அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது*

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.