Tuesday, December 18, 2018




தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களைஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புதிய பாடத்திட்டம், ரேங்க் முறை ரத்து, எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்டஇயக்குநர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்பப் பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளைப் பதிவு செய்யவும் தனியாக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கேமராக்கள், தொழில்நுட்பக் கருவிகள்வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. இது போன்ற அலைவரிசையை தமிழக மாணவர்களுக்காக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.... கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் (ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் இட்ஹய்ய்ங்ப் இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க் நற்ன்க்ண்ர்) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 ஆவது தளத்தில் அமையவுள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன் ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு ("ட்ரோன்') கேமரா வாங்கப்படும். இந்தப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்?:

 கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். புதிதாக தொடங்கப்படவுள்ள எல்.கே.ஜி. வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும்.

இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். பொங்கல் திருநாளில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.