Tuesday, March 12, 2019

திருக்குறள் : 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

உரை:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

பழமொழி:

Many drops make a shower

சிறு துளி பெரு வெள்ளம்

பொன்மொழி:

அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

சர்ச்சில்

இரண்டொழுக்க பண்பாடு :

1) உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்

2) இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்

பொது அறிவு :

1) மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?

26 மைல்.

2) காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

சிக்காகோ.

நீதிக்கதை :

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.



இன்றைய செய்தி துளிகள் : 

1) ஏப்ரல் 10ம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை முடிவு ? - சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக தகவல்

2) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

3) எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

4) பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

5) பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.