Tuesday, March 5, 2019

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும் யுஜிசியின் நெட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இத்தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்தத் தகுதித் தேர்வில், வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெறவுள்ள இந்த நெட் தேர்வானது புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் எனவும், புதிய பாடத் திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வுகள் முகமையகம் அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை :
இந்தத் தேர்வானது வரும் 2019 ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி (இன்று) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு துவங்கப்படவுள்ளது. பதிவு செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டானது மே 15-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய www.ntanet.nic.in அல்லது www.ugcnetonline.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.