Monday, March 4, 2019

உணவு பழக்க வழக்கம், மரபணு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. தற்போது மன அழுத்தம் காரணமாக கணைய புற்று நோய் உருவாகுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
தொடக்கத்தில் எலிகள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அது உறுதி செய்த பின் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தத்தால் கணைய புற்று நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. அதிகமான மன அழுத்தம் காரணமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஹார்மோன்கன் வெளியாகி அதன் மூலம் ‘டி.என்.ஏ’ மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு கணையத்தில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சில அறிவியல் நிபுணர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். அதே நேரத்தில் கணைய புற்று நோய் அதிக மன அழுத்தத்தால் உருவாகுவதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.