Thursday, March 14, 2019

மார்ச் 14-ம் தேதி உலக சிறுநீரக தினம். சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என வருடா வருடம் இந்நாளில் சிறுநீரக நிபுணர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சிறுநீரகத்தை பாதிக்கும் நோய்கள், அதனால் உடலில் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன எனப் பார்ப்போமா?


சீறுநீரகம் உடல் கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் ரத்த சிவப்பு அணுக்கள் உண்டாக்க உதவும். மேலும் எலும்புகளை வலுவாக்கும். ரத்தத்தில் தாதுக்களை சரியான அனுப்ப உதவும். உங்கள் சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம். 

அடிக்கடி சிறுநீர் கழித்தல் 

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இது சர்க்கரை நோய், ப்ராஸ்டேட் சுரபி வீக்கம், சிறுநீர் குழாய் தொற்று ஆகியவற்றின் விளைவாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தூக்கத்தில் சிரமம் 

உடல் கழிவுகள் சரியாக வெளியேற்றப்படவில்லை என்றால் இரவில் சரியான தூக்கம் வராது. 

மூட்டு வலி மற்றும் வீக்கம் 

சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் சோடியம் குறைபாடு ஏற்படும். இதனால் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். இது இதய நோய்களின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புண்டு. 

தசை பிடிப்பு 

சிறுநீரகம் செயல்படாமல் இருந்தால் எலெக்ட்ரோலைட் சமன்பாடின்மை ஏற்படக் கூடும். 
இதனால் தசை பிடிப்பு உண்டாகும். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.