தொப்பைக்கான காரணங்கள்:
கடைகளில் அழகாகக் கவர்ச்சியான நிறங்களில் செயற்கை மசாலா மற்றும் நிறமிகளை வைத்து அழகேற்றப்பட்ட உணவு வகைகளை ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் உண்டு விட்டால் நமக்குப் பலனாகக் கிடைப்பது நம்து உடலின் அழகைக் குறைக்கும் இந்தத் தொப்பைதான். அது மட்டுமல்லாமல் இந்தத் தொப்பைகளால் உடல் நலத்திற்கும் கேடு. தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே பலவிதமான நோய்களுக்கு அடித்தளமாகிவிடுகின்றன. உடலின் மற்ற பாகங்களில் தங்கும் கொழுப்பு மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்வதால் இரத்தக் கொழுப்புப் பிரச்சனை (கொலஸ்ட்ரால்), இளநரை, முடி உதிர்தல், சர்க்கரை நோய், வாதம், இதய நோய்கள், இளமையிலேயே முதுமையடைதல், குடலில் புண்கள், மாரடைப்பு, வளர்சிதைமாற்றம் (Metabolism) குறைந்து ஆண்களுக்கு ஆண்மையிழப்பு, பெண்களுக்குக் கருத்தரிக்கும் பண்பை இழத்தல் மற்றும் பலவிதமான நோய்களுக்குத் தொப்பை ஒன்றே காரணமாகிவிடுகிறது.
தொப்பையைக் குறைக்க உதவும் 15 அதிசய உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறைகள்:
அடிவயிற்றிலோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க நீங்கள் சரியான உணவுப் பழக்க வழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சரியான உணவுவகைகளை நல்ல வாழ்க்கைமுறையுடன் கூடி உண்பதால் உங்களின் வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்து மிகவிரைவில் வயிற்றில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து தொப்பையைக் குறைத்து விடலாம்.
1) தண்ணீர்:
தாகத்திற்கு மட்டும் இரண்டு அல்லது மூன்று மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால் போது என்று நினைக்கிறோம். ஆனால் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே தண்ணீர் அருந்துவதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். அதிலும் குறிப்பாகச் சித்தர்கள் “தமிழ் சித்த மருத்துவத்தில்” கூறியிருப்பது போல் செம்புபாத்திரத்தில் வைத்திருந்து குடிக்கும் தண்ணீரில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் தண்ணீரிலே கிடைத்துவிடும். மேலும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
2) பூண்டு:
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மிக அதிகம். நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும். எனினும் வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் கிழ்வரும் எளிமையான முறையைப் பின்பற்றலாம்.
ஒரு சிறிய அளவு கொள்கலனில் 10 முதல் 20 தோல் உறிக்கப்பட்ட பூண்டுகளைப் போட்டு அவற்றில் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) நீங்குவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்க உதவுகிறது.
குறிப்பு:
எந்தக் காரணத்தைக் கொண்டும் பூண்டை பச்சையாக உண்ண வேண்டாம். பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும். பூண்டைச் சாப்பிடும் முறை தெரியவில்லை எனில் உங்களுக்கு அருகில் உள்ள “தமிழ்ச் சித்த மருத்துவரை” அணுகவும்.
3) எலுமிச்சையும் அதன் சாறும்:
நமது உடல் நாள் முழுவதும் மிளிர்ப்புடனும், ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு குவளை எலுமிச்சைச் சாறு அருந்துவது மிகவும் நல்ல பலனைத் தரும். அது மட்டுமல்லாமல் எலுமிச்சை நமக்குத் தெரியாகப் பல மருத்துவச் செயல்களை உடலில் நிகழ்த்துகிறது. நமது உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், வளர்சிதைமாற்றத்தைத் (Metabolism) தூண்டி உடல் வலுவுடன் இருக்கவும் எலுமிச்சை உதவுகிறது. வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்தாலே உடல் சுறுசுறுப்படந்து தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கித் தொப்பையைக் குறைக்க மிகவும் வழிவகுத்துவிடும்.
கீழ்வரும் முறையில் எலுமிச்சை மருத்துவத்தைத் தொடங்கி உங்களின் தொப்பையைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம்: 6 முதல் 8 (தேவையான அளவு சாறாக்கிக் கொள்ளவும்)
- தண்ணீர்: 7 முதல் 8 குவளைகள் (தேவையான அளவு)
- தேன்: 1/2 குவளை அல்லது ஒரு குவளை
- புதினா: 10 முதல் 12 இலைகள்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி இளம் சூட்டில் எலுமிச்சை சாறு, புதினா மற்றும் தேனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் கிளர வேண்டும். பின்பு அதை இறக்கி அதன் சூடு போகும் வரை நன்றாகக் குளிர வைக்க வேண்டும். பின்னர் இதைக் குளிர் தானப் பெட்டியிலோ அல்லது மண்பானையிலோ (கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள் வேண்டும்) வைத்திருந்து தினமும் ஒரு குவளை குடிந்து வர வேண்டும். அதாவது காலை உணவிற்கு முன்பாக ஒரு குவளையும் மாலையில் ஒரு குவளையும் குடித்து வர வேண்டும்.
இவற்றில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கலாம். ஏனெனில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கும் போது அவற்றின் குளிர்த்தன்மையை வெதுவெதுப்பாக்க உடல் மிக அதிகமான சக்தியைப் பயன்படுத்துவதாகத் தகவல். ஆனால் பனிக்கட்டிகளை உபயோகிக்கும் முறை சளித் தொல்லையுடன் இருப்பவர்களுக்குச் சரிவராது. அதற்குச் சரியான வழி, மண்பானையில் வைத்திருந்து எடுத்து அருந்துவது தான்.
இவ்வாறு 7 முதல் 10 நாட்களுக்குச் செய்து வர உடல் எடைக் குறைப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு:
இவை சாதாரணமாக வீட்டில் செய்யக்கூடிய முறை. இவற்றை முழுமையான மருத்துவ முறையாக எண்ண வேண்டாம். சரியான மருத்துவ முறைக்கு உங்கள் அருகாமையில் உள்ள சித்த மருத்துவரை அணுகவும்.
4) வெள்ளைச் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது:
வெள்ளைச் சர்க்கரை (Refined sugar) என்பது பல்வேறு வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட இனிப்புத் துகள் ஆகும். தற்போது சதுர வடிவில் முற்றிலுமாக வேதியல் கலவைகளைக் கொண்டு தாயரிக்கப்பட்ட சர்க்கரை வந்துவிட்டது. எவ்விதமான செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் அனைத்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும். இந்தச் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைகள் இவையிரண்டையும் உணவில் சேர்க்கும்போது நமது உடலின் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிப்பதோடு தேவையற்ற நச்சுக்கள் உடலில் கலந்து நமது செரிமான உறுப்புகளைச் செதமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகிக்கிறது.
வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், அதிமதுரச் சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
5) அதிகப்படியான உப்பைத் தவிர்ப்பது நல்லது:
உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்றய சமையலில் இருந்தாலும் அதை அளவோடுதான் சேர்க்க வேண்டும். அதிகமான உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேற்றத்தைத் தடுப்பதால் உடலில் உள்ள கழிவுகள் சேர்ந்து உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. முடிந்த வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் கல் உப்பினை உபயோகிப்பது மிகவும் நன்று.
6) மீன் உணவு:
அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் கிடைக்கும். அனைத்து வகையான மீன்களிலும் ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக டுனா, சாலமன் மற்றும் நமது கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களில் இந்த ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.
7) இஞ்சி:
பெரும்பாலும் அசைவ உணவுகளில் நம் வீட்டில் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இஞ்சி பொதுவாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சியில் அதிகளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துத் தொப்பை குறைவிற்கு வழிவகுக்கிறது.
இஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. நமது தமிழ் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவது போல “காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசி நிமிர்ந்து நடப்பானே” இஞ்சியின் பலன் மிக அதிகம்.
கீழ்வரும் முறையைப் பயன்பற்றி இஞ்சியின் மூலம் உங்கள் தொப்பையினைக் குறைக்கலாம்:
- இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
- இஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப் பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத் தொப்பை குறைவதைக் காணலாம்.
8) பசும் தேநீர்:
இப்போது பசும் தேநீர் (Green Tea) அருந்துவது ஒரு வழக்கமாக இளைய தலைமுறையினரிடையே பரவி வருகிறது. பசும் தேநீரில் உள்ள உயிர்வளியேற்றஎதிர்ப்பொருள் (Antioxidants) கெட்ட கொழுப்பினைக் கரைத்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
9) சோடியம் (சோடியம் பைக்கார்பனேட்) உள்ள உணவுகளைத் தவிர்த்தல்:
எப்போதாவது நாம் வெளியில் உள்ள உணவங்களுக்குச் சென்று உணவு வாங்கி உண்ட பின்பு அதன் சுவையை எண்ணி புகழ்ந்து கொண்டே வருவோம். ஆனால் அதைச் செய்த அந்த உணவகத்தின் நிர்வாகத்திடம் நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி? “இவ்வளவுசுவைக்கான காரணம் என்ன?” என்பதுதான். ஆனால் நாம் கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும் அந்தக் கடைக்காரர் உண்மையைச் சொல்லப்போவதில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் இக்காலங்களில் உணவின் சுவையை ஏற்ற அதிகமாக உபயோகப்படுத்துவது “சோடியம்” உப்பே (baking soda) ஆகும். இவை முழுக்க முழுக்க வேதியல் பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும்.
இந்தச் சோடியம் பை கார்பனேட் எனப்படும் வேதிச் சேர்ம உப்பை வைத்துப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கலாம், கடினமான கரைகளை நீக்கப் பயன்படுத்தலாம், துருப்பிடித்த இரும்பை பலபலவென மாற்றப் பயன்படுத்தலாம் மெலும் பட்டாசுத்தொழில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அபாயாகரமான சோடியத்தைத் தான் உணவுகளிலும் பயன்படுத்துகிறார்கள். இவை உணவின் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல் அவற்றை மிருதுவாக்கவும், பெரிது படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இந்தச் சோடியம் கலந்த உணவுப் பொருட்கள் நமது உடலுக்குச் சென்றால் இவற்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு கொழுப்பான உணவுகள் முழுமையாகச் செரிமானம் ஏற்படாமல் வயிற்றிலேயே தங்கிவிடுகிறது. இவைப் பிறகு இரத்தத்திலும் கலந்து கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் இவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.
10) ஆப்பிள் பழம்:
தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. ஆப்பிள் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்(Antioxidants) என்பவை உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்த பழமாகக் கருதப்படுகிறது.
11) சிறுதானியங்கள்:
சிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.
12) நல்ல தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல்:
மனிதனின் உடல் ஒரு நாளில் செய்யும் வேலைகளுக்கு ஈடான உடல் ஓய்வு கட்டாயம் தேவை. குறைந்தது 7 முதல் 8 மணிவரையான நல்ல தூக்கம் தேவை. உடல் உழைப்பைத் தவிர மூளைக்குக் கொடுக்கும் வேலைகளும் உடலுக்குச் சோர்வைத் தரும். அதனால் ஒரு நாளில் வேலையே செய்யாமல் சோம்பலாக இருந்தாலும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமே இல்லாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும். ஆனால் சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.
13) காலை உணவைக் கண்டிப்பாக உண்ணவும்:
உணவைக் குறைத்து அதாவது ஏதாவது ஒரு நேர உணைவைத் தவிர்த்து விட்டால் உடல் எடை அதிகமாவதைத் தவிர்த்து விடலாம் என மிகச் சிலர் நினைப்பர். அது முற்றிலும் தவறான எண்ணம். உண்மையில் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு நான்கு வேளைச் சாப்பிட வேண்டும். அதாவது உங்கள் வயிற்றினை வெறும்னே போடக் கூடாது. எப்பொழுதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தேவையான அளவு சாப்பிட வேண்டும். முக்கியமாகக் காலையில் முடிந்த அளவு எட்டு மணிக்கு முன்பே நன்றாகப் போதுமான அளவு உண்ண வேண்டும். அதாவது காலை உணவு மதிய உணவைப் போல் அதிகமாகவும், மதிய உணவு சற்றே குறைவாகவும், இரவு உணவு குறைவாகவும் இருக்க வேண்டும். இடப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் பழங்கள் மற்றும் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.
காலையில் எழுந்தவுடன், ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது இரவு முழுவதும் வெறுமையாக இருந்த வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. வயிற்றின் பசியை ஆற்றாமல் வெறுமையாகப் பல மணிநேரம் விட்டுவிட்டால் வயிற்றில் வாயுக்கள் தங்கி அதுவே தொப்பை ஏற்படுவதற்கான காரணமாகிவிடுகிறது. எனவே பசி ஏற்படும் நேரங்களிலோ அல்லது வகுக்கப்பட்ட சரியான நேரங்களிலோ நன்றாக உண்டு தொப்பை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
14) உடற்பயிற்சி:
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம். உங்களில் தினசரி முற்றிலும் உடல் உழைப்பாக இருந்தால் உடற்பயிற்சி அவசியமில்லை. தானாகவெ கெட்ட கொழுப்பு வியர்வையின் மூலம் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. முழுவதுமான உடல் உழைப்பு என்பது நகரத்தில் இருக்கும் வாகனம் ஓட்டுதல் அல்லது எப்போதும் நின்று கொண்டிருக்கும் பயண்ச்சீட்டு வழங்கும் வேலை அல்ல. உழவுத் தொழில் ஈடுபடும் விவசாயிகளின் வேலையானது முழுவதுமான உடல் உழைப்பில் சேரும்.
உழவுத்தொழிலில் ஈடுபட முடியாத மற்றவர்கள் வேறு வழியே இல்லை. ஏதாவது ஒரு உடல் இயக்கத்தைத் தினந்தோறும் கொண்டிருந்தால் மட்டுமே தொப்பையைக் குறைத்து நல்ல ஒரு உடல் அமைப்பைப் பெற முடியும்.
மேலும் வீட்டிலேயே செய்யக்கூடிய உக்கி அல்லது தோப்புக்கரணம் (உட்கார்ந்து எழும் உடற்பயிற்சி), கயிறு தாவுதல் போன்ற முறைகளினாலும் நம்து உடலிற்கு மிகவும் தேவையான இயக்கங்களைக் கொடுத்து விடலாம். தோப்புக்கரணம் மற்றும் கயிறு தாவுதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய உடற்பயிற்சி நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. வீட்டிலேயே அவற்றைச் செய்யலாம்.
உங்களுக்கு யோகா (தவக்கலை) போன்றவற்றில் ஈடுபாடும் நேரமும் இருந்தால் யோகா ஆசிரியரின் உதவியுடன் வயிற்றில் தங்கும் அல்லது தொப்பைக் குறைந்தவுடன் ஏற்படும் தொங்கு நிலையில் இருக்கும் வயிற்றைச் சரி செய்வதற்காகனப் பயிற்சிகளைச் செய்ய மற்க்க வேண்டாம். யோகா பயிற்சியால் மட்டுமே தொப்பையைக் குறைத்து விட முடியாது. அதனுடன் சேர்ந்து மேற்கூடிய உணவுப் பழக்கவழக்கங்களையும் செய்ய வேண்டும்.
15) தினமும் நடைபயிற்சி:
மிகப்பெரிய உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் சிறிதளவாவது உங்கள் உடலில் இயக்கத்தைக் கொண்டுவர் மிகவும் எளிதான ஒன்று நடை பயிற்சியாகும். அதாவது இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட உணவுமுறைகளைக் கையாள்வதுடன் தினந்தோறும் குறைந்த பட்சம் 5 முதல் 10 கிலோ மீட்டர்வரை நடந்தோ ஓடியோ வருபவர்களுக்குத் தொப்பை என்ற சொல்லே மறந்து போகுமளவிற்கு உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும். சிறிய பொருள் வாங்கக் கூடக் கடைக்கு வண்டியில் செல்லாமல் நடந்து செல்ல முற்படுபவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக அமையும்.
மேற்கூரிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது மட்டும் தொப்பையைக் குறைப்பதற்கு வழிவகுக்காது. இதற்கிடையில் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் உங்களால் தொப்பையைக் குறைப்பதற்கான முயற்சியில் 5 சத்வீத்த்தைக் கூட எட்ட முடியாது. உங்களுக்குக் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை முதலில் நிறுத்தி விட்டு இந்த முயற்சியைத் தொடங்கவும்.
அதேபோல் உங்கள் நீங்கள் உண்ணும் சிற்றுண்டிகள் மைதா மற்றும் சோடியம் இல்லாத சிறுதானிய மாவுகளில் செய்யப்பட்ட வடை, பச்சி, முறுக்கு, அதிரேசம் மற்றும் சீடை சிற்றுண்டிகளாக இருக்கட்டும். பாரம்பரிய முறையிலான உணவுத் தயாரிப்பு முறையே உங்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக அமையும்.
ஒழுக்கமான வாழ்க்கை முறை, மனச்சோர்வைத் தவிர்த்தல், மேற்கூறிய உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், நல்ல உடற்பயிற்சி போன்றவற்றால் முற்றிலுமாக உங்களின் தொப்பையைக் குறைக்க முடியும். இவை அனைத்தையும் கடைபிடிப்பது மிகவும் கடினமானது ஒன்றும் இல்லை. இன்றய நவீன காலத்தில் மட்டுமே இவ்வாறான தொப்பைப் பிரச்சினைகளுக்கு மனிதன் சிக்கி தவிர்க்கிறான். பழங்காலத்தில் தமிழர் உண்ட உணவினால் இந்த அளவிற்கு நோய்களின் பிடியில் மனிதன் இருந்தான் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. இதனால் நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு இரகசியத்தை அறிய முடியும். அதாவது பழங்காலத் தமிழரின் வாழ்க்கை முறையையும் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களையும் நாமும் பின்பற்றினாலே தொப்பையில்லா ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்
Nice Post !!
ReplyDeleteLook here at
Buy Avana 100mg Tablet
Buy Generic Super P Force Tablets
Buy Generic Clenbuterol Hcl Tablets
Buy Fildena 100 Tablet
Super Vidalista is a revolutionary formula for the treatment of impotence and premature ejaculation in men. It contains 20 mg of Tadalafil and 60mg of Dapoxetine, very used for erectile dysfunction impotence and premature ejaculation treatments.
ReplyDelete