Monday, December 10, 2018



'கிடைத்த வாய்ப்பை....''.
...........................................

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான்.

அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.
அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை
வழுக்கையுமாக இருக்கும்.

சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள் ...

உனக்கு இறக்கை எதற்கு..?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!

முன்னந் தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!

ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோர் இருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!

பின்னந் தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது..?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப்
பிடித்துக் கொள்ளா இருப்பதற்காக!

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்.

இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.

ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால்
அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது
என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்..?

ஆம்,நண்பர்களே.,

இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை
தவற விட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும்
என நம்பி காத்து இருப்பதைவிட,கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே வெற்றியை தரும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.