Saturday, December 1, 2018


வணக்கம். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் என்றால் என்ன? அவற்றின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் எப்படிப் பரவுகிறது, அதற்கானக் காரணங்கள் என்ன? எப்படிப் பரிசோதனை செய்வது? தடுப்பு முறைகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையினை இந்தக் கட்டுரையில் காணலாம்.

எச்.ஐ.வி என்றால் என்ன?

எச்.ஐ.வி (ஹெச்ஐவி ‍ HIV) (தமிழில்: “மனித நோயெதிர்த்திறனழித் தீ நுண்மம்” எனலாம்) என்பது மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனைத் தாக்கி அழிக்கும் தீநுண்மம் (வைரசு) ஆகும். இந்த எச்.ஐ.வி வைரஸ் நமது உடலின் இயற்கையான பாதுகாப்புக்கு எதிரானது. இந்த வைரஸ் நோய் தடுப்பு மண்டலத்தில் உள்ள “டி – உதவி செல்” என்று அழைக்கப்படும் ஒருவகையான வெள்ளை இரத்த அணுக்களை அழித்து உள்ளேயே தன்னை நகலெடுத்துக் கொள்கிறது. “டி – உதவி செல்கள்” (T helper cells) சிடி4 செல்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
எச்.ஐ.வி மேலும் சிடி4 உயிரணுக்களை அழித்து அதிகமான அளவில் தன்னுடைய நகல்களை உருவாக்குகின்றன. இவ்வாறு ஏற்படுவதன் மூலம் படிப்படியாக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறை செயலிழக்கிறது. சிகிச்சை பெறாமல், எச்.ஐ.வி தீ நுண்மத்துடன் (வைரஸ்)  வாழும் ஒருவர் தொற்று நோய்களையும் பிற நோய்களையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகும் என்பதே இதன் பொருள்.
இத்தகைய எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரஸ்) உடலில் இருந்து சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை மிகவும் கடுமையாகப் பதிக்கப்படலாம். அதற்குமேல் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. எனினும் எச்.ஐ.வி வைரஸின் முன்னேற்றத்தின் வேகம் பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் உடல்நலம் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

எச்.ஐ.வி பற்றிய அடிப்படை உண்மைகள்:

  • எச்.ஐ.வி என்பது மனித நோயெதிர்த்திறனழித் தீ நுண்மம் (Human immunodeficiency virus) எனப்படும்.
  • இதற்குப் பயனுள்ள ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை முறை (Antiretroviral therapy) உள்ள்து. இதன்மூலம் எச்.ஐ.வியினால் பதிக்கப்பட்டவர்கள் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்ம்.
  • முன்னரே எச்.ஐ.வி நோய் கண்டறியப்பட்டால் விரைவில் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.
  • விந்து, இரத்தம், யோனி திரவங்கள் மற்றும் மார்பகப் பால் ஆகியவற்றில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • எச்..வி வியர்வைஉமிழ்நீர் அல்லது சிறுநீர் மூலம் பரவாது.
  • உடலுறவின் போது ஆணுறை அல்லது பென் குறியுறை உபயோகிப்பது எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரசு) மற்றும் பிற பாலியல் தொற்று நோய்கள் பரவுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.
  • நீங்கள் ஊசி போட்டுக் கொள்ளும் போது சுத்தமான ஊசியினை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஒரு போதும் ஊசியினை மற்றாவருடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.
  • எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவர் கர்ப்பமாக இருந்தால் இரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி வைரஸ் குழந்தைப் பெற்றப் பிறகு பாலூட்டுவதின் மூலம் குழந்தைக்குச் செல்லலாம். இதனால் எச்.ஐ.வி சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்வது இத்தகைய ஆபத்தைக் குறைக்கிறது.

எயிட்ஸ் என்றால் என்ன?

எயிட்ஸ் (எயிட்சு) என்பது ஒரு வைரஸ் (தீ நுண்மம்) அல்ல. ஆனால் எச்.ஐ.வி தீ நுண்மம் (வைரஸ்) காரணமாக ஏற்படும் அறிகுறிகள் அல்லது குறைபாடுகளின் தொகுப்பு ஆகும். ஒரு நபருக்கு எயிட்ஸ் இருப்பதாகக் கூறப்படுவது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான திறன் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதாகும். மேலும் இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பது சில வரையறுக்கப்பட்ட நோய்களின் அற்குறிகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன. இந்நிலை தான் எச்.ஐ.வி யின் கடைசிக் கட்டமாகும். எச்.ஐ.வியின் தொற்று மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி மேலும் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மரணத்திற்கு இட்டுச் செல்கிறது.

எயிட்ஸ் பற்றிய அடிப்படை உண்மைகள்:

  • எயிட்ஸ் (எயிட்சு ‍- Acquired Immune Deficiency Syndrome) என்பது “நோயெதிர்ப்புக்குறைபாடு அறிகுறி” ஆகும். “பெறப்பட்ட மனித நோய்யெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறி குறி” அல்லது “பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறி குறி” எனவும் கூறலாம்.
  • எயிட்ஸ் எச்.ஐ.வி நோய்த் தொற்று அல்லது எச்.ஐ.வியின் கடைசி நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட எச்.ஐ.வி வைரஸ் (ஹெச்ஐவி தீ நுண்மம்) தொற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் அழிக்கப்படுவதன் விளைவாக நோய்க்கான அறிகுறிகள் அல்லது நோய்களின் தொகுப்பினை உருவாக்குகிறது. இதுவே எயிட்சு (எயிட்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.
  • எச்.ஐ.வி வைரஸின் நோய்த் தொற்றுக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை பெருமளவில் குறைக்கிறாது. எனினும் குறைவான மக்களுக்கு எயிட்ஸ் உருவாகி விடுகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் சரியான சிகிச்சை மற்றும் ஆதரவுடன் எச்.ஐ.விக்கு சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். இதைச் செய்வதற்கு குறிப்பாகச் சரியான சிகிச்சை முறையைக் கையள்வது மிகவும் முக்கியமானதாகும். அதோடு கூடப் பக்க விளைவுகளையும் சமாளிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment