Saturday, December 1, 2018

எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவரின் நோய்த் தொற்றுடைய‌ இரத்தம், விந்து மற்றும் யோனி சுரப்பிகள் உங்கள் உடலில் நுழைய வேண்டும். இவ்வாறு யாருடைய உடலில் நுழைகிறதோ அவர்களும் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவார். இதைத் தவிர்த்து எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் கொண்ட நபருடன் சாதாரணமாகத் தொடர்பு கொள்ளுவதால் (அதாவது கட்டிப்பித்தல், முத்தம் கொடுத்தல், கை குலுக்குதல் மற்றும் நடனமாடுதல்) மற்றவருக்கு நோய்த் தொற்று ஏற்படாது. காற்று, நீர் மற்றும் பூச்சி கடித்தல் போன்றவற்றால் எச்.ஐ.வி நோய்த் தொற்று ஏற்படாது.
கீழ்வரும் வழிகளின் எச்.ஐ.வி தோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1) உடலுறவு:

எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம், விந்து மற்றும் யோனிச் சுரப்புகளுடன் நீங்கள் உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு வைத்திருந்தால் எச்.ஐ.வி நோய்த் தொற்று உங்கள் இரத்தத்திலும் கலந்து விடுகிறது. இதனால் எயிட்சு நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த வைரஸ் உங்கள் உடலை வாய்ப்புண்கள் அல்லது கண்ணீரின் மூலம் கூட வந்தடைகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் தொடர்பு கொள்ளும் போது மலக்குடலிலோ அல்லது கற்பப்பை வாயிலிலோ இந்து வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

2) இரத்தமேற்றுதல்:

சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் இரத்தத்தினை மற்றும் போது இரத்தம் வழியாகவும் பரவுகிறது. அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் தற்போது எச்.ஐ.வி ஆன்டிபாடிகளுக்கு இரத்தம் வழங்குவதைக் தடைசெய்கின்றன. எனவே இரத்த மாற்றத்தின் மூலம் ஏற்படும் ஆபத்து மிகவும் சிறியது.

3) ஊசிகள்:

எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் உள்ள அசுத்தமான ஊசிகளின் மூலமும் எச்.ஐ.வி நோய்த் தொற்றுப் பரவுகிறது. உடலிற்கு உள்ளே உட்செலுத்துகின்ற மருந்து அல்லது போதைப் பொருளைப் பகிர்ந்து கொள்வதினால் எச்.ஐ.வி மற்றும் பிற தொற்று நோய்களான ஹெபைட்டிஸ் போன்ற அதிக ஆபத்து நிறைந்த நோய்களுக்கு உங்களை உட்படுத்துகின்றன.

4) கர்ப்பகாலம் ‍- தாய்ப்பால்:

எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மூலம் கூடக் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படலாம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் தாய்ப்பால் மூலம் கூட நோய்த் தொற்றுப் பரவுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைப் பெறுவதன் மூலம், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி நோய்த் தொற்று ஏற்படுவதற்காகான ஆபத்தினைப் பெருமளவில் குறைக்கிறார்கள்.

0 comments:

Post a Comment