Thursday, November 15, 2018


காரைக்குடி: காரைக்குடியையே திரும்பி பார்க்க வைத்தது அந்த திருமணம்!! காரணம், தழைய தழைய பட்டுப்புடவை கட்டி, தலைநிறைய பூவை வைத்திருந்த வெளிநாட்டு பெண்ணை, முனியாண்டி மகன் கார்த்திகேயன் திருமணம் செய்ததுதான்!!
காரைக்குடி அருகே உள்ள ஊர் பள்ளத்தூர். இங்கு வசித்து வருபவர்தான் முனியாண்டி. விவசாயி. கடுமையான உழைப்பாளி. முனியாண்டி தன் மகன் கார்த்திகேயனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். டிப்ளமோ படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் கார்த்திகேயன்.
அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெர்டிலிஸ் என்ற இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த பெண்ணை லவ் பண்ண ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 8 வருஷங்களாக லவ் பண்ணி, வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவுடன், அந்த பெண்ணை கல்யாணம் செய்ய வீட்டில் அனுமதி கேட்டார்.
கலந்து பேசினர் 
பெற்றோர் சம்மதம்
பெற்றோரும் சம்மதம் தந்துவிட்டனர். இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி நாள் குறிக்கப்பட்டது. பள்ளத்தூரிலேயே கல்யாணம் என முடிவானது. தமிழ்கலாச்சார முறைப்படி, சம்பிரதாயப்படி இந்த திருமணம் நடத்தலாம் என்று கூறப்பட்டது.பட்டுப்புடவை 
தலைநிறைய பூ
அதன்படியே ஏற்பாடும் நடந்தது. தழைய தழைய பட்டுப்புடவை கட்டிக் கொண்டு, நகைகள், மாலை, பூச்சூடி பெர்லிஸ் வந்தார். நண்பர்கள், பெரியவர்கள், புடைசூழ கார்த்திகேயன் பெர்லிசுக்கு தாலி கட்டினார். அம்மி மிதித்து அருந்ததியும் பார்க்கப்பட்டது.
பெர்லிஸ் பேட்டி
பாரம்பரிய முறை
மணமக்கள் இருவரும் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதுகுறித்து கல்யாண பெண் பெர்லிஸ் சொல்லும்போது, "எனக்கு தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் நமக்கு கல்யாணம் நடக்கும்போது இந்த முறைப்படித்தான் கல்யாணம் செய்யணும் என்று கார்த்தியிடம் சொல்லிக்கிட்டே இருந்தேன். அப்படியே இப்போது நடந்து விட்டது.
ஒரே குறை
பெற்றோர் ஆசி
எனக்கு ஒரே குறை, என் அம்மா-அப்பாவுக்கு விசா பிரச்சனை என்பதால் அவர்களால் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் என்ன, நாங்கள் ரெண்டு பேரும் இந்தோனேஷியாவுக்கு போய் ஆசீர்வாதம் வாங்கிக்குவோம். தமிழ்நாட்டு மருமகள் என்று சொல்லி கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது" என்றார்.

0 comments:

Post a Comment