திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அரசாணை நகல் எரித்த 300 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கு 1988 முதல் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, அரசாணை 7, 8 வது ஊதியக்குழு அரசாணை மூலம் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ரத்து செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசாணை நகலை எரித்தனர்.இதில் செயலாளர் ஜேம்ஸ், ஜெ.எஸ்.ஆர்., தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குன்வர், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி நடராஜன் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர். போராட்ட முடிவில்,அரசாணையை எரித்ததாக 300 ஆசிரியர்கள் மீது நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரசாணை எரிப்பு ஆசிரியர்கள் மீது வழக்கு

0 comments:
Post a Comment