இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் மதராசப் பட்டினத்தில்(தற்போது சென்னை) நிகழ்ந்த ஒரு சாதாரண கொலை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அது லக்ஷ்மி காந்தன் கொலை. “க்ஷ்” ரொம்போ பழய கதை என்பதால்,. நாம் லட்சுமி காந்தன் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் லெட்சுமி காந்தன் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழில் லட்சுமி என்பது சரியாக இருக்கும் என என்னுகிறேன்.
எடுத்தெடுப்பிலேயே லட்சுமி காந்தன் கொலை வழக்கை சொல்ல ஒரு காரணம் இருக்கு. இன்றைக்கு எல்லா பத்திரிகைகளும் பிரபல கொலைகளை அலச ஆரமிச்சதுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த கொலை தான். இந்த வழக்கை பற்றி படிப்பதிலும் விவாதிப்பதிலும் மக்கள் காட்டிய ஆர்வமே, இன்றைய பத்திரிக்கையுலகில் ஜூனியர் விகடன், ரிப்போட்டர், நக்கீரன் என எண்ணற்ற துப்பரியும் இதழ்கள் வர காரணம். அதனால் தான் நித்தியானந்தருடன் ரஞ்சிதா குஜாலா இருந்ததைப்பத்தி பக்கம் பக்கமா போடராங்க, நாமும் படிச்சுக்கிட்டு இருக்கோம்.
இதில் மிகப் பெரிய ஆச்சிரியம்,. லட்சுமிகாந்தன் ஒரு தேசதலைவரோ, மக்கள் அபிமானியோ இல்லை. ஏன் சினிமா நட்சத்திரமும் இல்லை. பின் ஏன் மக்கள் இந்த கொலை வழக்கில் ஆர்வம் காட்டினார்கள் என்றால் அந்த கொலையை செய்தவர்கள் பெரும் நட்சத்திரங்கள் என்பதால்தான்.
யார் லட்சுமி காந்தன் –
அடியே லட்சுமிகாந்தம் செத்துப்போய்ட்டியா என வைக்கோல் கன்றை கையில் வைத்துக் கொண்டு நம்ம கவுண்டர் லந்து பண்ணுவதை ஒரு படத்தில் பார்த்திருப்பீர்கள். அதுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்கோ.
நம்மைப் போல சாதாரணமான மனிதன் லட்சுமி காந்தன். சட்டம் படித்து நிதிமன்றத்தில் வழக்கறிஞனாக பவனி வர ஆசை கொண்டவன். ஆசையுள்ளவன் எல்லாம் அரண்மனைக்கு போக முடியுமா. ஏழ்மை அவனின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. படிக்க இயலாமல் போய்விட்டதே தவிற, சட்டத்தின் மீதிருந்த ஆர்வம் குறையவில்லை. அதனால் வழக்கறிஞர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டான். சில நுணுக்கமான சட்டங்கள் உட்பட எல்லாவற்றையும் அறிந்து கொண்டான்.
வாழ்க்கையை ஓட்டுவதற்காக வழக்கறிஞர்களுக்கு வழக்கை பிடித்து கொடுக்கும் வேலையை செய்தான். இதன் மூலம் பல குற்றவாளிகளும் நண்பர்களாக மாறினார்கள். நல்ல முறையில் சென்று கொண்டிருந்தவனுக்கு, தகாத நட்பினால் சின்ன சின்ன ஏமாற்று வேலைகள் பழக்கமாயின. விரைவில் ஒரு போலி பத்திரத்தில் பொய் கையெழுத்திட்டதற்காக ஃபோர்ஜரி வழக்கில் கைது செய்யப்பட்டான். ராஜமுந்திரி(ராஜாமஹென்றவரம்) சிறையில் ஏழு ஆண்டுகள் இருந்தான். பின் லட்சுமி காந்தனை தொடர்வண்டியில் அழைத்து சென்றனர் காவல் துறையினர். எப்படியோ அவர்களுக்கு அல்வா கொடுத்தவிட்டு தொடர்வண்டியிருந்து தப்பித்தான். அடுத்து தொடர் விசாரனையில் ஈடுபட்ட காவல்துறை மீண்டும் லட்சுமிகாந்தனை கைது செய்தது. ஆனால் இம்முறை பலத்த காவலோடு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டான் லட்சுமி.
ஜப்பான் நாடு அந்தமான் தீவினை தன் வசமாக்கி கொள்ள விடுதலை செய்யப்பட்டு மதராஸ் வந்தவன் புது முடிவோடு வந்திருந்தான். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தால், காகிதங்களுக்கு பற்றாக்குறை நிலவியது. அதனால் புதுபத்திரிக்கைகள் தொடங்க தடைவிதிக்கப்பட்டிருந்து. ஆனால் லட்சுமிக்கு தோன்றிய யோசனை அந்த தடையை தகர்ப்பதுதான். சுகந்திர கட்டுரைகளும், இலக்கியங்களும் மட்டுமே வந்து கொண்டிருந்த பத்திரிக்கைகளுக்கு மாற்றாக “சினிமாதூது” என்ற பத்திரிக்கையை தொடங்கினான்.
இன்றைய குமுதம்,குங்கும், ஆனந்தவிகடன் போன்றவைகளின் முன்னோடி இதுதான். இன்னும் சொல்லப்போனால் வண்ணத்திரை, சினிமாசிந்து என்று கிசுகிசுக்களுக்காக மட்டும் தொடங்கப்பட்ட முதல் பத்திரிக்கை. இந்தப்பத்திரிக்கைதான் லட்சுமியின் கொலைக்கு காரணம் என்றால் நம்மவே முடியாது. ஆனால் உண்மை அதுவே. நயன்தாரா வாரத்திற்கு ஒருவருடன் சுற்றினால் கூட அதெல்லாம் சகஜமப்பு என்று போய்விடக்கூடிய காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அவர் பத்திரிக்கை ஆரமித்து 2010ல் இல்லை. 1940வாக்கில் என்பதால், கிசுகிசுக்களுக்கு எல்லோரும் பயந்தார்கள்.
ஏக பத்தினி விரதனாகவும், பத்தினிகளாகவும் மட்டுமே மக்களால் பார்க்கப்பட்ட திரையுலக ஜாம்பவான்களின் அந்தரங்க விஷயங்Kளை புட்டு புட்டு வைத்து சினிமா தூது. மக்கள் வாயை பிளந்து கொண்டு வாங்கிப் படித்தார்கள். அட இவுரு அவர வைச்சுருக்காராமே. திரையுலம் இன்றளவும் விபச்சார உலகமாக பார்க்கப்படும் சிந்தனைக்கு முதல் வித்து சினிமாதூது. நாயகனை உண்மையான நாயகனாகவே மக்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அவன் அழுதால் மக்கள் அழுதார்கள், அவன் சிரித்தால் மக்களும் சிரித்தார்கள். அதனால் உண்மைகள் வரத் தொடங்கியதும் திரையுலம் மிகவும் கொந்தளித்து.
அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜ பாகவதர். நகைச்சுவை மன்னாக என்.எஸ்.கிருஷ்ணன், பெரிய தயாரிப்பாளராக ஸ்ரீராமுலு நாயுடு, கதாநாயகி என்றால் அது, டி.ஆர்.ராஜகுமாரி. லட்சுமியின் இலக்கு இவர்கள் தான். மற்ற பிரபலங்கலெல்லாம் அவ்வப்போது வந்து வந்து மறைவார்கள். சிலர் பணத்தினை கொடுத்து லட்சுமியிடம் இருந்து தங்களின் அந்தரங்கங்களை பாதுகாத்துக் கொண்டார். மக்கள் மற்ற பத்திரிக்கைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தங்களின் கவணத்தினை சினிமாதூதுன்மீது மட்டும் செலுத்த ஆரமித்தார்கள். லட்சுமியின் புகழோடு பணம் பெருமளவு குவிந்தது. ஏற்கனவே புகழோடும், பண பலத்தோடும் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா. லட்சுமிக்கு எதிராக செயல்பட ஆரமித்தார்கள்.
அவர்களில் பாகவதர், என்.எஸ்.கே மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் மதறாஸ் கவர்னராக இருந்த ஆர்தர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் , “சினிமா தூது” பத்திரிக்கை பற்றி விரிவாக புகார் கூறி, அதனுடைய பதிப்பை ரத்து செய்யவேண்டும் என்றொரு மனுவை சமர்ப்பித்தனர். அடுத்து சினிமா தூது நின்றது. பிரபலங்Kள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த வேளையில் மக்கள் புலம்பத் தொடங்கினார்கள். மக்களிடம் விரசமான விசயங்களை படிக்கும் பழக்கம் இன்னொரு பத்திரிக்கைக்காக காத்திருந்தது. அவர்களிடம் இருக்கும் வரவேற்பினை பயன்படுத்திக் கொள்ள, லட்சுமிகாந்தனிடம் இன்னொரு திட்டம் இருந்தது.
அந்தநேரத்தில் லிங்கிச்செட்டித் தெருவில் “ஹிந்து நேசன்” என்றொரு பத்திரிக்கையை அனந்தய்யர் என்பவர் நடத்திக்கொண்டிருந்தார். வெகு சுமாராக போய்க்கொண்டிருந்த அந்தப் பத்திரிக்கை லட்சுமி காந்தனின் திட்டத்திற்கு ஏற்றதாக இருந்தது. சினிமாதூது கொடுத்த புகழும், பணமும் அடுத்த பத்திரிக்கையான ஹிந்து நேசனை மக்களின் நாயகனாக மாற்றியது. மீண்டும் பிரபலங்களின் அந்தரங்கங்கள் இன்னும் விரிவாக வெளியிடப்பட்டன. சினிமாதூது நிறுத்தப்படக் காரணமான பாகவதர், என்.எஸ்.கே மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு எதிராக நிறைய விஷயங்கள் ஏற்படத் தொடங்கின. மக்களிடம் செல்வாக்கு பெற்ற மூவரை ஹிந்து நேசன் எதிரிகளாக மாற்றிக் கொண்டிருந்தது. அதன் விளைவுகளை லட்சுமி உணரவில்லை.
ஒரு புறம் மக்கள் மஞ்சள் பத்திரிக்கை என வர்ணிக்கப்படும் ஹிந்து நேசனுக்கு அடிமையாக மாறினார்கள். தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள், ராஜாக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் அம்பளப்படுத்த தொடங்கவும் எதிர்ப்பு வலுத்து. வெறும் கிசுகிசு என்பதைத் தாண்டி செலட்சுமி முடிவு செய்தான். மிகவும் சிக்கலான வழக்குகளுக்கும் சட்டம் தெரிந்தவன் என்பதால் உதவ எண்ணினான். “போட் மெயில்” என்ற பெயரில் மதராசப்பட்டினத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த தொடர்வண்டியில் தேவக் கோட்டையை சேர்ந்த வங்கி நிறுவனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் பிரபலங்களின் சிலரது பெயர்கள் ஹிந்து நேசனில் வெளிவர தொடங்கயது. லட்சுமி காந்தனுக்கு பல எதிரிகளை இது போன்ற விஷயங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்றாலும் அதற்கெல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை.
1944-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று மதறாஸ் வேப்பேரியிலுள்ள வக்கீலும் தனது நண்பருமான நற்குணம் என்பவரைச் சந்தித்து விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் புரசைவாக்கத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். திடீரென்று சைக்கிள் ரிக்ஷா பின்பக்கமாக சாய்ந்து விழுந்தது! ரிக்ஷாவின் பின்புறம் இருவர் நின்று கொண்டிருந்தனர் வடிவேலுவும் நாகலிங்கமும். இதில் வடிவேலுவுக்கும் லட்சுமிகாந்தனுக்கும் வீடு காலி செய்யும் விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்த நேரத்தில் மல்லாந்து விழுந்து கிடந்த லட்சுமிகாந்தனை வடிவேலு கத்தியால் குத்தினான். திகைத்து நின்ற ரிக்ஷாக்காரரை நாகலிங்கம் அடித்து விரட்டினான். பின்பு தன் பங்க நாகலிங்கமும் கையிலிருந்த பேனாகத்தியால் லட்சுமிகாந்தனை குத்தினான். நாகலிங்கமும், வடிவேலுவும் ஓடிவிட, உடலில் ரத்தம் வெள்ளமாக வந்து கொண்டிருந்த போது லட்சுமி உயிர் தப்ப முயன்றான்.
அந்த வேளையிலும் ஆங்கிலோ இந்தியனான ப்ரூவிடம் நடந்தவைகளை விவரித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்றான். ரத்தப்போக்கு மிகுந்திருப்பதால் ஆட்டோ ரிக்ஷாவில் செல்ல ப்ரூ ஏற்பாடு செய்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றான் லட்சுமி. ஆனாலும் ரிக்ஷாவினை விட்டு கீழே இறங்க முடியவில்லை. எனவே காவல் துறை அதிகாரி கிருஷ்ணன் நம்பியார் அவன் கூறுவதை எழுதிக் கொண்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், டாக்டர். பாலகிருஷ்ணன் விசாரனை நடத்தினார். பலத்த கத்தி குத்து காரணமாக அன்று இரவு உடல்நிலை மிகவும் மோசமானது. அடுத்த நாள் காலை 4.15க்கு லட்சுமி காந்தன் இறந்து போனான்.
இவன் இருந்தால் தானே தொல்லை கொடுப்பான் என்று
0 comments:
Post a Comment