நமக்கு தெரியாத பல தொழில் நுட்ப அறிவுகளையும் அவர்கள் அவ்வளவு சுபலமாக கையாளத் தெரிந்து வைத்துள்ளனர்.
நமது கிராப்புறங்களை சேர்ந்த சிறுவர்களும், ஒரு சில நகர்புறங்களிலும் வீடுகளில் சிறுவர்கள் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஒரு சிலர் பெற்றோர்கள் நற்செயலுக்காக கொடுத்தாலும் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், நண்பர்களுடனோ இல்லை. வேறு சிலருடனே சேர்ந்த தவறான வலைதளங்கு சென்று விடுகின்றனர்.
நாம் படிப்புக்காக கொடுத்தாலும், அவர்கள் தவறாக பயன்படுத்துவதையும், அவர்கள் எந்த வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு செய்து விட்டால், அவர்கள் அதைத்தான் பயன்படுத்த முடியும்.
மற்ற வலைதளங்களை அவர்களால் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்கு தற்போது ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது.
இன்று ப்ரீகேசி குழந்தைகள் முதல் 12ம் வகுப்பு வரை செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஆபாச வலைதளம் என்று தெரிந்தும் பயன்படுத்துகின்றனர். தமிழக பள்ளி கல்விதுறையும் மாணவர்களுக்காக அனைத்து பாடங்களையும் டியூப்பில் டியூசன் போன்று வழங்கின்றது. இதை பார்க்க மாணவர்கள் சென்றாலும் அதில் ஆபாசங்களும் வரும்.
பெற்றோர்கள் அலுவலகம் மற்றும் வேலை செய்பவர்களா இருப்பார்கள். தங்கள் குழந்தைகள் எந்த மாதிரி காட்சிகள் பார்கின்றனர் என்றும் அந்த வலைதளம் பார்க்கின்றனர் என்றும் கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களால் இதை கண்காணிக்க முடியாமலும் இருந்தது.
0 comments:
Post a Comment