ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்றாலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், போராட்டத்தை ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து காலவரையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருப்பதை ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், இந்த நேரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும், போராட்டங்களே இன்றி நியாயமான கோரிக்கைகள் கலந்து பேசி நிறைவேற்றித் தரப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

No comments: