Friday, November 30, 2018


டெல்லி: டெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல்லி மக்களை பெரிதும் ஈர்த்து இருக்கிறார்கள். தமிழர்களின் போராட்ட முறையை பார்த்து அவர்கள் வியந்து போய் உள்ளனர். டெல்லியே தற்போது ஸ்தம்பித்து போய் இருக்கிறது. 4 லட்சம் விவசாயிகள் அங்கு போராடி வருகின்றனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் அவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
நேற்று காலை டெல்லிக்கு சென்ற விவசாயிகள், மாலை வரை எல்லாம் போராட்டம் செய்ய காத்திருக்கவில்லை. நேற்று காலை வந்தவுடனே போராட்டம் செய்ய தொடங்கிட்டனர். காலையிலேயே டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் எல்லோரும் அரை ஆடை உடுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். இதற்கு பின் ஒரு உளவியல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா மாநில விவசாயிகளும் அவர்களின் பாரம்பரிய உடைகளில் வந்துள்னனர். ஆனால் தமிழக விவசாயிகள் மட்டும்தான், விவசாயத்தின் போது என்ன உடையை அணிந்து இருப்பார்களோ அதையே அணிந்து போராட்டம் செய்து வருகிறார்கள். அதாவது வயலில் நிற்பது போல வெறும் துண்டு அணிந்தோ, கைலி அணிந்தோ போராடி வருகிறார்கள்.
இதுமட்டுமில்லாமல், தலையில் கொடி கட்டி இருப்பது, பச்சை துண்டு போட்டு இருப்பது, கழுத்தில் எலும்புக்கு கூடு மாலை போட்டு இருப்பது என்றும் போராடுகிறார்கள். ராஜஸ்தான் மாநில விவசாயிகள் ஆட்டம், பாட்டம் என்று போராட்டம் செய்து வருகிறார்கள். மாறாக தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம் வைத்து வருகின்றனர்.
இது டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்களின் வித்தியசமான போராட்ட முறை அவர்களை கவர்ந்து இருக்கிறது. போராட்டம் செய்பவர்களின் நோக்கமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment