Wednesday, November 28, 2018

TNPSC - Group IV - Certificate Verification cum Counselling. தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2015-16, 2016-17 மற்றும் 2017-2018- [Combined Civil Services Examination-IV (Group-IV Services)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.11.2017 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.02.2018 அன்று நடைபெற்று எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் 30.07.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 03.12.2018 அன்று முதல் நடைபெற உள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து www.tnpsc.org.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

| The Tamil Nadu Public Service Commission in its Notification dated 14.11.2017 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2015-16, 2016-17 and 2017 – 2018. The Written Examination was held on 11.02.2018 and results published on 30.07.2018. In order to verify the genuineness of claim of the candidates made in their on-line application regarding age, qualification, community etc., and to fill up the vacancies, Original Certificate Verification cum Counselling is scheduled to be held at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 from 03.12.2018 onwards. 2) The list of candidates who have been provisionally admitted for the original Certificate Verification cum Counselling have been shortlisted based on merit, overall rank, Rule of Reservation of appointments and Number of vacancies and the same have been hosted in the Commission’s Website. Candidates are hereby informed to download the Memorandum of Admission to Certificate Verification cum Counselling through the Commission’s Web-site viz www.tnpsc.org.in and also directed to attend the Certificate Verification cum Counselling on the scheduled date / time without fail. 3) The allotment to the posts is strictly subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 4) Candidates who do not appear for Original Certificate Verification cum Counselling on the scheduled date and time allotted to them will lose their opportunity in the combined merit list; and, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission

0 comments:

Post a Comment