மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொது செயலாளர் ச.மயில் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பெ.அலோசியஸ் துரைராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் சி.ஜி.பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கம் வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின்போது ச.மயில் கூறியதாவது:- தமிழகத்தில் ஒரே கல்வி த்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7-வது மற்றும் 8-வது ஊதிய உயர்வை அமல்படுத்தியும் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பாதிப்புகளை எதிர்த்து கடந்த 9 ஆண்டுகளில் 58 போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனாலும் இதுவரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு சரி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி 7-வது ஊதிய குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 234 மற்றும் 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி வெளியிட்ட 303 ஆகிய 2 அரசாணைகளின் நகல்களை தீயில் போட்டு எரிக்க முயன்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தல்லுமுல்லு ஏற்பட்டது. சேப்பாக்கம் பகுதியில் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் அரசாணை நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு

0 comments:
Post a Comment