இன்றைய ராசிபலன்கள் (05.03.2019)
மேஷம் :
தொழிலில் வேலையாட்களால் எற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளையும் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.
ரிஷபம் :
குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொது நலக்காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள்.கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உணவு விசயங்களில் கவனம் வேண்டும்.
மிதுனம் :
சாதுர்யமான பேச்சுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உதியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கோயில்களுக்குச் சென்று குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் :
பணிகளை காலதாமதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு கூடும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும்.பிறரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்தல் நல்லது. கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.
சிம்மம் :
வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் மனைவிக்கிடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.
கன்னி :
பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையக் கூடும்.
துலாம் :
செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.அலங்கார பொருட்கள் மீது நாட்டம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
விருச்சகம் :
மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
தனுசு :
எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மரியாதைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மகரம் :
உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். வியாபாரத்தில் மூதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.
கும்பம் :
உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை கட்டுபடுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடு வது நல்லது. உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
மீனம் :
எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை உண்டாகும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்
0 comments:
Post a Comment